இன்றைய ராசிபலன் – 16 ஜனவரி 2023

jan 16 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாக செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களால் ஆதாயம் காணலாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளை சமாளிப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் தன்னிலை தவறாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நற்செயல்கள் நன்மை செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் கூடுதல் ஆர்வம் உண்டாகும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிறைவு இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. பெற்றோர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேலை வலு அதிகரிக்கும் இதனால் அசதி ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதுரியமாக செயல்படக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்காமல் போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விவேகத்திலும் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி உறவில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்காது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சி திருவினையாக்கும். கடினமான உழைப்பு உங்களை உயர்த்தி காட்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாந்தம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அமைதியை நாடலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகவீனம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு கூடுமானவரை தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நன்மை தரும். கணவன் மனைவி உறவுக்கு இடையே புது புரிதல் உண்டாகும். சுய தொழிலில் பணம் புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை இருக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையான உதவிகளை பெறக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுயநலம் பாராமல் முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதனை படைக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தனை புதிதாக உதிக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கோபம் ஏற்படலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போர் குணம் தோன்றக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் செயலில் காலதாமதம் உண்டாகலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. குடும்பத்துடன் முரண் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சினம் தேவை. குடும்ப அமைதிக்கு சில தியாகங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படலாம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

- Advertisement -