இன்றைய ராசிபலன் – 16 ஜனவரி 2024

Rasi-palan-new16
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. உடல் அசதி இருக்கும். நேற்றைய பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, இன்றும் சில வேலைகளை செய்ய வேண்டியதால் சோர்வு இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நல்லா சாப்பிடுங்க. நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுங்க. நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். வேலையில் முக்கியமான விஷயங்களை ஒப்படைத்தால் கூடுதல் கவனம் எடுத்து செய்யவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நேரம் போனதே தெரியாது. கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு இன்று அற்புதம் வாய்ந்த அனுபவங்கள் கிடைக்கும். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். தொலைபேசியின் மூலம் பிரச்சனைகள் வரும். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் துயரங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் சுமந்திருந்த மன பாரத்தை கீழே இறக்கி வைப்பீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் தானாக சரியாகிவிடும். வருமானம் பெருகும். சில பேருக்கு வீண்விரய செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பம் குழந்தையோடு சேர்ந்து நேரத்தை கழிப்பதற்கு நல்ல வாய்ப்பு இது. பொழுதுபோக்கான இடங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீகம் சார்ந்த வழிபாடும் மன நிம்மதியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். மனசு லேசாகும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் வீண் வம்புகள் தேடி வர வாய்ப்பு உள்ளது. அளவோடு பேசுங்கள். முன்பின் தெரியாத நபரிடம் பழகாதீங்க. சொந்த ஊருக்கு சென்று இருந்தால் உங்கள் கெத்தை காட்டுகின்றேன் என்று அடுத்தவர்களை ஏளனம் பேசக்கூடாது ஜாக்கிரதை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியே கொடுக்கும். தொழிலில் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். சில பேருக்கு சொந்த பந்தங்களோடு சேர்ந்து இன்றைய நாள் முழுவதும் குதூகலமா இருக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று காலை நேரம் ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் மாலை நேரம் சந்தோஷமாக செல்லும். வேலையில் காலை நேரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். சில பிரஷர் இருக்கும். இதை முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உங்களுக்கு தலைவலியை கொடுத்து விடும். கஷ்டப்பட்டு அந்த வேலையை முடிச்சிடுவீங்க. மாலை நேரம் குடும்பத்தோடு சந்தோஷமா வெளியிடங்களுக்கு ஒரு சுற்று கிளம்புவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொந்த வேலை ஆயிரம் இருந்தாலும், இன்று உங்க வியாபாரத்தையும் அலுவலகப் பணியை கொண்டு தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மனைவி பிள்ளை குட்டிகளை ஒதுக்கி வைக்க கூடிய சூழல் உண்டாகும். இதனால் சில பேருக்கு மன சஞ்சலம் ஏற்படும். நல்ல நாளில் கூட குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு வேலை கையில் எடுத்தால் அவ்வளவு எளிதில் முடியாது. எல்லாம் இழுப்பறியாகவே இருக்கும். இதனால் புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைத்து விடுங்கள். இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை கிடையாது. அடுத்தவர்களுடைய விவகாரத்தில் மூக்கை நுழைத்தால் உங்க மூக்கு தான் உடையும் பார்த்துக்கோங்க. வாழ்க்கை துணை பேச்சைக் கேட்டு நடக்கவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். நாலு பேர் செய்ய வேண்டிய வேலையே, ஒருவரே செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீங்க. அதற்கேற்ற பாராட்டுகளும் கிடைக்கும். சம்பளமும் கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதை பெறுவீர்கள். மனது சந்தோஷம் அடையும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப வேலை இருக்கும். வேலைப்பளு அதிகமான காரணத்தால் தலைவலி வரும். உடல் அசதி ஏற்படும். டென்ஷன் கூடும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரொம்பவும் பிரஷரை ஏற்றிக்கொண்டால் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். மனதை ரிலாக்ஸாக்க பொழுதுபோக்கான சில விஷயங்களில் ஈடுபடவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். இதனுநாள் வரை சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருப்பீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். கணவன், மனைவியை புரிந்து கொள்ளவும், மனைவி கணவனை புரிந்து கொள்ளவும், நல்ல வாய்ப்பு கிடைக்கும். விட்டுக் கொடுப்பது எத்தனை நல்லது என்பதை இன்று உணர்ந்து சந்தோஷமழையில் நனைய போறீங்க.

- Advertisement -