இன்றைய ராசிபலன் – 16 பிப்ரவரி 2024

Rasi-palan-new16
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களை கஷ்டப்படுத்த எவ்வளவுதான் டார்கெட்டை கொடுத்தாலும், அதை சரியாக முடித்து விடுவீர்கள். எதிரிகளை எதிர்த்துப் போராடக் கூடிய மனப்பக்குவம் உங்களிடத்தில் இருக்கும். எதற்கும் பயப்பட மாட்டீங்க. இந்த நாள் இறுதியில் உங்களுடைய எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உங்களுடைய திறமை அந்த அளவுக்கு வெளிப்பட போகிறது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். இரண்டு பேர் செய்யக்கூடிய வேலையை, ஒரே ஆளாக நின்று செய்து முடிப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். இதனால் இந்த நாள் இறுதியில் உடல் அசதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கண் திருஷ்டியும் உங்கள் மீது விழும். ஏனென்றால் நீங்கள் வேலை செய்த அழகை பார்த்து நிறைய பேர் கண்ணு வச்சிருப்பாங்க. வீட்டுக்கு போனது திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க. சந்தோஷமா இருங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருந்தாலும், இன்று காலை சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். லேட்டா போய் ஆபீஸ்ல திட்டு வாங்குவது, தப்பு தப்பா ஏதாவது பண்ணி மனைவியிடம் திட்டு வாங்குவது, போன்ற சின்ன சின்ன சங்கடங்கள் வரும். பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. இருந்தாலும் உற்சாகத்தோடு சேர்ந்து கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டிய நாள். யாராவது தேன் ஒழுக பேசினால் உடனே நம்பி பணத்தை கொடுத்திடாதீங்க. உங்களுடைய ரொம்ப சீக்ரட்டான விஷயத்தை லீக் பண்ணிடாதீங்க. பிறகு பிரச்சினையாகிவிடும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்தது நடக்காது. அதனால் கொஞ்சம் உடல் சோர்வு மனசோர்வு இருக்கும். வேலையில் பின்னடைவு ஏற்படும். எல்லா நாளும் நாம நினைத்தது போல இருக்காது அல்லவா. நினைத்தது நடக்கும் போது, சந்தோஷம் இருக்கணும். நினைத்தது நடக்காத போது அதை கடந்து செல்ல வேண்டிய பக்குவம் உங்களிடத்தில் வரணும். அப்பதான் நீங்க வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எல்லா விஷயங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த வேலை உடனடியாக முடியாது. இழுப்பறியாக இருக்கும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் முதலீடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் இருக்கட்டும். பாட்னரிடம், வியாபாரியிடம் கவனமாக பேச வேண்டும். யாராவது உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. கவனக்குறைவாக வேலை பாக்காதீங்க.

கன்னி


கன்னிராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. மனைவி உங்கள் மனசை புரிந்து நடந்துக்குவாங்க. கணவன்மார்கள் மனைவியின் மனதை புரிந்து நடந்து கொள்வீர்கள். நீண்ட நாள் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மணமகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முடிந்தால் இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு போயிட்டு வாங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்ய முடியாது. மனதில் ஏதோ ஒரு குழப்பம். அதனால் வேலையில் கவனம் இல்லாத சூழ்நிலை உண்டாகும். குழப்பத்தை சரி செய்ய பிரச்சனைக்கான காரணத்தை அலசி ஆராய வெளிப்படையாக பேசி விடுங்கள். கேட்கலாமா வேணாமா, பேசலாமா வேணாமா என்ற குழப்பமே உங்களுக்குள் இருக்கக் கூடாது. மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசிவிட்டால் எந்த பிரச்சனையும் யாருக்கும் இருக்காது.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. உங்க வேலையை நீங்க பார்ப்பீங்க. உங்க வியாபாரத்தை நீங்கள் கவனிப்பீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் ஆனால் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனை பெருசாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனத்தோடு இருந்துக்கோங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். கொஞ்சம் பணத்தட்டுப்பாடு இருக்கும். பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் எப்படி கட்டுவது? கரண்ட் பில் எப்படி கட்டுவது? மளிகை சாமான் எப்படி வாங்குவது என்று பல குழப்பங்கள் இன்று வந்து உங்களை நெருக்கடி கொடுக்கும். காரணம் கையில் வந்த பணத்தை அதிகமாக செலவு செய்ததுதான். நிதி நிலைமையை சமாளிக்க சேமிப்பை அதிகப்படுத்துங்கள். இன்றைக்கான பிரச்சனை கூடிய விரைவில் சரியாயிடும் கவலைப்படாதீங்க கடவுளிடம் வேண்டிக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய தொழில் தொடங்குவது புதிய வேலை தேடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் அடுத்தவர்களை பற்றி அனாவசியமாக கமெண்ட் பண்ணாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையும் ஒன்றுக்கு இரட்டிப்பாக ஆகும். செய்த வேலையே திரும்பி செய்ய வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். வீண் விரைய செலவுகள் உண்டாகவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் டென்ஷன் தலைவலி வரும். வழக்கம்போல கோவப்பட்டு கத்தாதிங்க. நிதானமாய் இருங்க சூழ்நிலைகள் எல்லா நாளும் ஒரே போல இருக்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாயை கொஞ்சம் அடக்கி கொள்ள வேண்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. சொந்த பந்தங்கள் இடையே சேர்ந்து இந்த நாள் மாலையில் சூப்பரா ஒரு கெட் டு கெதர் நடக்கும். இதனால் மனசு சந்தோஷமடையும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளின் சந்திப்பு ஏற்படும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது. மனைவியிடம் பொய் சொல்லக்கூடிய பழக்கத்தை நிறுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கை இன்னும் சுவைக்கும்.

- Advertisement -