இன்றைய ராசிபலன் – 16 மார்ச் 2024

Rasi-palan-new16
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருந்தால் எல்லா காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் இன்று கோபப்படவே கூடாது. அவசரப்பட்டு பேசவே கூடாது. நின்று நிதானமாக இருங்கள். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுலபமாக சாதித்து விடுவீர்கள். வேலைக்குப் போகக் கூடியவர்களாக இருந்தால் உங்களுக்கு பொறுமை இருக்க வேண்டும். வேலையை விடும் அளவுக்கு பிரச்சனை சென்றால் கூட வேலையை விடக்கூடாது. நம்பிக்கையோடு பொறுமையாக இருந்தால் நிச்சயம் இன்று நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று தினமும் செய்யக்கூடிய வேலையில் கூடுதல் அக்கறையும் கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டும். பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக செலவு செய்யாதீங்க. சேமிப்பில் அக்கறை காட்டுங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தால் வாக்குவாதம் செய்யக்கூடாது. தொழிலில் புதிய முதலீடுகளை செய்யாதீங்க. முன்பின் தெரியாதவர்களுக்கு பணம் கொடுக்காதீங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று சாமர்த்தியமாக நடந்து கொள்வீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், அதை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். இதனால் வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டு மழையில் நனைய கூட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மனதில் நினைத்த நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சம்பள உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய நிதி நிலைமை சீராக இருக்கும். வாழ்க்கை துணைக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி செல்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையும் நல்லபடியாக நடக்கும். சொன்ன நேரத்துக்கு சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து விடுவீர்கள். வாக்கை காப்பாற்ற கூடிய நாள் இது. ஆனால் மனைவியிடம் திட்டுவாங்க வாய்ப்பு உள்ளது. எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் மனைவியிடம் பணிந்து தான் போக வேண்டும். உங்களுடைய திறமையை, கில்லாடித்தனத்தை மனைவியிடம் காட்டாதீங்க. அவர்களிடம் பணிந்து போனால் இன்று தப்பித்துக் கொள்ளலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகளை எல்லாம் கூட சரி செய்து விடுவீர்கள். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு பார்த்து பார்த்து சில நல்ல விஷயங்களை செய்வீர்கள். இதனால் மனதிருப்தி அடைவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வழக்கத்தை விட வேலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் வேற வருகிறது. அதை சந்தோஷமாக வரவேற்க வேண்டும் என்றால், இன்றைக்காண வேலையை முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் சில பேர் தலையில் விழும். டென்ஷன் ஆகாமல் பொறுமையாக பிளான் பண்ணீங்கன்னா, பக்காவா எல்லா வேலையும் முடித்துவிடலாம். கொஞ்சம் பயந்து தடுமாறினாலும் உங்க கதை முடிஞ்சது பாத்துக்கோங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் சந்தோஷம் இருக்கும். ரொம்ப நாள் பிரிந்த நட்பை சந்திக்க கூட வாய்ப்பு உள்ளது. ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அவ்வளவுதான். மற்றபடி சுப செலவுகள் இருக்கும். கையில் இருக்கும் பணம் செலவாக கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று உஷாரா இருந்துக்கோங்க. ரொம்ப தெரிஞ்சவங்க, இவங்க என்னுடைய பெஸ்ட் பிரண்ட், என்று சொல்லிக் கூட அவர்களிடம் உங்களுடைய பர்சனல் விஷயங்களை ஷேர் பண்ண கூடாது. யாரிடமாவது இன்று நீங்கள் ஏமாற வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் போலவே தெரிந்தாலும், அவர்கள் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இன்று எதிராக செயல்படலாம். ஆகவே ஜாக்கிரதையா இருந்துக்கோங்க இன்று உங்களுடைய தொலைநோக்குப் பார்வை தான் உங்களை காப்பாற்றும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். நல்ல மனிதர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். அதேபோல உங்களுக்கு எதிராக செயல்படும், குள்ளநரி வேலை பார்க்கக் கூடிய மனிதர்களையும் கண்டுபிடித்து விடுவீர்கள். வாழ்க்கை என்றால் இதுதான் என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு சில பாடங்களை இன்று உங்களுக்கு வாழ்க்கை கற்றுத் தரப் போகிறது. ஆகவே சந்தோஷம் கிடைத்தால், அதை மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். ஏதாவது பிரச்சனை வந்தால் அதை அனுபவமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். அவர்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்துவிட்டு, அவர்கள் மனது நோகும் படி நீங்கள் பேசிவிடாதீர்கள். உங்களுடைய வார்த்தையில் இன்று அதிக கவனம் தேவை. சொந்த பந்தங்கள் ரொம்பவும் நாசுக்கானவை. நாம் விளையாட்டாக எதையாவது பேசி விடுவோம். ஆனால் எதிராளியின் மனது புண்படுகிறதா என்பது நமக்கு தெரியாது. நீங்க கொஞ்சம் வார்த்தையில் கவனம் கொடுக்கணும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் குறைய கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு இருக்கும். நல்லது நடக்கும். ஆனால் தலைகனம் மட்டும் உங்களுக்கு வந்து விடக்கூடாது. ஏறி வந்த ஏணிப்படி மிதித்து கீழே தள்ளினால் நஷ்டம் உங்களுக்குத்தான். அதை நீங்கள் இன்று உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்.

- Advertisement -