இன்றைய ராசிபலன் – 16 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எடுத்த காரியங்களில் சற்று தடைகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகும். தொழில், வியாபாரங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.. சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரங்களில் இருந்த போட்டிகள் விலகும். நினைத்ததை சாதிக்க கூடிய நாள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பழைய கடன் பாக்கிகள் வந்து சேரும். சகோதரர் வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தூரத்து உறவினர்களை கண்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் சிலருக்கு தன லாபம் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் பெண்கள் வழியில் பணவரவு ஏற்படும். சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம் சரியான நேரத்தில் வந்து சேரும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் உத்யோகத்தில் பணிச்சுமை ஏற்படும். பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலர் தொலைதூர ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வருவார்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெறும். தமிழ் வியாபாரங்களில் சராசரியான வருமானமே இருக்கும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் வீண் அலைச்சல் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் மந்த நிலையை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்பு உண்டு. வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் சிறிது தடங்கலுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தடைகளை தகர்த்தெறியும் நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தன லாபம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வருமானத்துடன் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பாக இருக்கும். உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், விருந்து போன்றவற்றில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பாக்கிகளை கட்டி முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் அந்நிய நபர்களால் நன்மைகள் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -