இன்றைய ராசிபலன் – 16 அக்டோபர் 2023

daily-rasi-palan16
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வாரத்தின் தொடக்க நாளே நிறைய உழைத்து உழைத்து களைத்து போகப் போகிறீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மூன்றாவது நபரால் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை மூன்றாவது மனிதர்களை குடும்ப பஞ்சாயத்துக்கு கூப்பிடாதீங்க.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுயநலமாக நடந்து கொள்ளக் கூடாது. பிறர் நலத்தையும் கருதி நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பாராட்டை பெற்றுத் தரும். மனநிறைவையும் கொடுக்கும். பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். குடும்பத்தில் மனைவி பேச்சைக் கேட்டு நடந்தால் பிரச்சனைகள் இல்லை.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. வீட்டிலிருந்து வந்த சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். சகோதர சகோதரி உறவுகள் பலம் பெறும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். மற்றபடி எல்லாம் சுமூகமாக நடக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எந்த ஒரு வேலையும் சுறுசுறுப்பாக இயங்காது. ஏன் தான் இந்த வேலையை செய்கின்றோமோ என்று சில பேருக்கு தோணும். இருந்தாலும் மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள். உற்சாகம் தானாக பிறக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை பட நாலு பேர் இருப்பார்கள். அவர்கள் உங்களுடைய தோல்வியை பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அவர்களுடைய சூழ்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக செய்வீங்க. இரவில் நல்ல தூக்கம் இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். சொந்த தொழிலில் பார்ட்னரை முழுசா நம்பாதீங்க. கணக்கு வழக்குகளை கொஞ்சம் நீங்களும் பார்ப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வாரா கடன் வசூல் ஆகும். திறமைகள் வெளிப்படும் நாள். பாராட்டுகள் கிடைக்கும் நாள். மாணவர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதிக எடை உள்ளவர்கள் உங்களுடைய எடையை குறைப்பதற்கு முயற்சி செய்யவும். மற்றபடி செய்யும் தொழில், செய்யும் வேலை எல்லாவற்றிலும் கவனத்தோடு செயல்பட்டால் பிரச்சனைகள் இல்லை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் மனசுக்கு எது சரி என்று படுகிறதோ அந்த முடிவை எடுப்பீங்க. அடுத்தவர்களை பற்றி யோசிக்க மாட்டீர்கள். இதனால் புதிய எதிரி உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது‌. எதுவாக இருந்தாலும் அடுத்தவர்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ள வேண்டாம். நாசுக்காக செய்தால் பிரச்சனை இல்லை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். மேலதிகாரிகள் சொன்ன வேலையை தவறாமல் செய்து விடவும். சாக்குப் போக்கு சொல்லாதீங்க. சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அதனால் வேலை செய்பவர்களை அதிகமாக திட்டாதீங்க. முன்கோப படாதீங்க விட்டுக் கொடுத்து வேலை வாங்கினால் நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன் பின் யோசிக்காமல் நீங்கள் செய்யக்கூடிய காரியம் சிக்கல்களை உண்டு பண்ணும். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது நடக்கும்.

- Advertisement -