இன்றைய ராசி பலன் – நவம்பர் 16, 2022

today rasipalan nov 16 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய சுற்றி இருப்பவர்களுடைய சுயரூபத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து காணப்படும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் தகுந்த சமயத்தில் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண், வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கக்கூடும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் வரலாம் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் அரசாங்க விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விமர்சனங்கள் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் வண்ணம் அமைய இருக்கிறது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சவாலான வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து காட்டக்கூடிய அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சமூக ரீதியான அக்கறை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பை ஏற்க கூடும். ஆரோக்கிய ரீதியான சிறு சிறு பாதிப்புகளையும் உடனே சரி செய்து கொள்ளுங்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் எதையும் சாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில சூட்சமங்கள் புரிய ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மந்த நிலையுடன் இருக்க வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்டுக் கொண்டிருந்த உங்களுடைய கனவுகள் பலிதமாகும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவ அறிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவியிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் போகலாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் நீடிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உங்களை திக்கு முக்காட செய்யலாம். கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதுரியம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

தனுசு:
தனுசசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனப்போர் நீங்க கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நடக்கவில்லையே என்று நினைத்த ஒரு காரியம் நடக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பக்கம் ஈடுபாடு அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கடன்களை சுமக்க வேண்டி வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்க வேண்டும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற உணர்ச்சி பூர்வமான முடிவுகளை தள்ளிப் போடுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியூர் தொடர்பான விஷயத்தில் சாதக பலன் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை காணப் போகிறீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப ஒற்றுமையில் சிக்கல்கள் வரலாம் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடைய விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடனை வசூல் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் முயற்சி தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சோர்வுடன் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திட்டமிட்ட காரியங்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பனி போல் ஆரம்பிக்கும் பிரச்சனை மலை போல் முடிய கூடும் எச்சரிக்கை உணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்

- Advertisement -