இன்றைய ராசிபலன் – 16 டிசம்பர் 2023

Rasi-palan16
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாகவே தொடங்கினாலும், இன்றைய நாள் இறுதியில் உங்களுடைய வேலையை எல்லாம் சரியாக முடித்து இருப்பீர்கள். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். எதிரிகளை சமாளிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். ஆனால் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்யும் அளவுக்கு உங்களுடைய திறமை இருக்கும். ஆகவே இன்றைய நாள் எந்த கவலையும் வேண்டாம்.

ரிசபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நற்பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கும். சந்தோஷத்தோடு இந்த நாளை நகர்த்திச் செல்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளால் பெற்றவர்களுக்கு பெருமை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீட்டை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய யுத்திகளை அறிமுகம் பண்ணலாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புத்தம் புது வாய்ப்புகள் வீடு தேடி வரும். இதுநாள் வரை இருந்து வந்த கஷ்டங்களுக்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில் நல்லது நடக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது. அதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்ளுங்கள். அனாவசிய செலவு குறைக்கவும். வாழ்க்கை துணை ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். உறவுகளிடம் பொய் சொல்லாதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். சில பேருக்கு மனசு கஷ்டமாக இருப்பது போல ஒரு உணர்வு இருக்கும். கடவுளை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெற்றவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அளவான உணவை சாப்பிடவும். ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எடுக்கக்கூடிய முடிவுகள் வெற்றியை கொடுக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதுசாக வீடு மாற்றுவது, அலுவலக பணிகளில் புதுசாக முயற்சிகள் மேற்கொள்ளுவது, வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வது, போன்ற விஷயங்களில் இன்று ஆர்வம் காட்டலாம். கமிஷன் தொழிலும் நல்ல லாபத்தை கொடுக்கும். சின்ன சின்ன வியாபாரிகள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை புதிய மாற்றங்கள் புது லாபத்தை கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் முட்டி மோதி தான் இந்த நாளை கடக்க வேண்டிய சூழ்நிலையாக இருக்கும். நீங்கள் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க. உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க. வேலை செய்யும் இடம், வியாபாரம் என்று எல்லா இடத்திலும் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். அதேசமயம் இதனால் உங்களுக்கு மனசோர்வும் ஏற்படும். ஆனால் இதிலிருந்து மீண்டு வருவதில் தான் சவாலே இருக்கிறது. யார் உங்களை தாழ்த்தி பேசினாலும் கவலைப்படாதீங்க. உங்களுடைய முடிவில் உறுதியாக இருங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். சட்டத்துக்கு புறமான காரியங்களில் ஈடுபட வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களிடம் வம்பு சண்டைக்கு போகாதீங்க. யாராவது கோபமாக பேசினால் கூட, சரி சரி என்று தலையாட்டிக் கொண்டு செல்லுங்கள். மற்றபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டால் தகராறு பெருசாகிவிடும். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. வீட்டில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பீர்கள். ஒரு அடி கூட உங்கள் காலை பின்னுக்கு எடுத்து வைக்க மாட்டீங்க. குலதெய்வ வழிபாட்டை ஒரு முறை குடும்பத்தோடு சென்று செய்து வர பாருங்கள். மேலும் மேலும் உங்களுக்கு நன்மை நடக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கவனக்குறைவோடு எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லேசாக பொறாமை குணம் வெளிப்படும். அடுத்தவர்களை பார்த்து இவர்களைப் போல் நாமும் வாழ வேண்டும் என்று எண்ணம் உங்களுக்குள் வரும். இதனால் சில ஆடம்பர வேலையை செய்வீர்கள். கையில் இருக்கும் பணத்தை இழக்க வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் இன்னைக்கு மனதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நமக்கு என்ன தேவையோ அதை ஆண்டவன் கொடுப்பான். அதை வைத்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமை படாதீங்க. புளியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை தான் பின்பு.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது உற்சாகமாக இருக்கும். எல்லா வேலையும் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே செய்து முடித்து விடுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். மேல் அதிகாரிகளிடம் நற்பெயரை சம்பாதிக்கும் வாய்ப்புகள் தேடி வரும். இன்று உங்களுடைய தகுதி பல மடங்கு மேலே உயரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுப்புது யுத்திகளை அறிமுகப்படுத்த சிந்திப்பீர்கள். ஆனால் எந்த யோசனையும் சரியாக கை கொடுக்காது. ஆன்லைன் பிசினஸ் பெருசாக வருமானத்தை கொடுக்காது. சூதாட்டம் வேண்டாம். நிதி நிலைமை சீராக இருந்தாலும், பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷார். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பிரச்சனையாகிவிடும் என்று யோசித்த விஷயங்களை எல்லாம் அந்த கடவுள் இன்று நல்லபடியாக முடித்துக் கொடுப்பான். உங்களுக்கு சோதனையை கொடுக்கும் கடவுள், என்றைக்குமே கை விட மாட்டான். கடவுளை முழுசாக நம்புங்கள். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடக்கவும். ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது.

- Advertisement -