இன்றைய ராசி பலன் – 16-05-2021

rasi palan - 16-5-21
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாகன ரீதியான பயணத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் உற்சாகத்துடன் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். தெறி மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பல தடைகளும், இடையூறுகளும் ஏற்படும் பொழுதும் தளராத மனம் கொண்டு இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மன சங்கடங்கள், விரக்தியும் ஏற்படாமலிருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படும் பொழுது நல்லதே நடக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக தொகை எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் குறையும். ஆரோக்யம் சீராக இருக்கும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கும் அவர்களின் பாராட்டு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காவிட்டாலும் சுமுகமான சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளை தேடி போராடுவீர்கள். மனோதிடம் அதிகரிக்கும் நாள்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்போதோ நிறுத்தி வைத்த சில விஷயங்கள் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வீண் வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மையை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதையும் சாதிக்கும் திறன் உங்களிடம் இருக்கும் என்பதை நம்புவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப காரியங்கள் கை கூடும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் கவனம் தேவை. பிள்ளைகள் வழியே சில பிரச்சனைகள் ஏற்படலாம். எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் ஈட்டுவதில் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகள் உடனான பிரச்சனைகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. குடும்பத்தின் மரியாதை அதிகரிக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன் இருக்கும். ஒரு சிலருக்கு தாய்வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் திறம்பட சமாளிப்பீர்கள். பெண்களுக்கு நினைத்ததை சாதிக்கும் இனிய நாள்.

- Advertisement -