இன்றைய ராசிபலன் – 17 ஜனவரி 2024

Rasi-palan-new17
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவன குறைவு காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். சின்ன சின்ன திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். சில பேருக்கு நீண்ட தூர பயணம் உடல் அசதியை ஏற்படுத்தும். சொந்த ஊரிலிருந்து வேலைக்கு திரும்பவர்கள் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலை சுறுசுறுப்பாக நடக்கும். சொந்த தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். லாபம் கிடைக்கக்கூடிய வழியை தேடி கண்டுபிடிப்பீர்கள். வாழ்வின் முன்னேறுவதற்கு தேவையான அத்தனை வாய்ப்புகளும் ஒரு சேர வந்து குவிய போகின்றது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நல்லது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொங்கல் பண்டிகை எல்லாம் முடிவடைந்து வேலைக்கு போக சில பேருக்கு சோம்பேறித்தனம் இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழ்நிலைக்கு உங்களை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள். ஆகவே பெருசாக எந்த பிரச்சினையும் இருக்காது. கோர்ட்டு கேஸ் வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும். பங்காளிகள் சண்டை தீரும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். உடல் சோர்வு இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகப் பணியில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். சொந்த தொழிலில் பார்ட்னரின் மூலம் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. கடன் வாங்க வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாரா இருக்கணும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளால் பிரச்சனை வரும். உங்களை முன்னேற விடாமல் தடுக்க சில பேர் வருவார்கள். அதையும் தாண்டி பிரச்சனைகளை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்றால் தந்திரமாக செயல்பட வேண்டும். எதிராளியை விட அதிபுத்திசாலிதனமாக யோசிக்க வேண்டும். மாறாக மனம் உடைந்து போனால் உங்களுக்கு தான் கஷ்டம். பயப்படாதீங்க எதிர்த்து போராட தைரியத்தை வர வைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். நாலு பேர் செய்ய வேண்டிய வேலையை உங்கள் தலைமையில் கட்டி விடுவார்கள். வேறு வழி கிடையாது. பண்டிகை நாள் என்பதால் சொந்த ஊர் திரும்பாதவர்கள் வேலையும் நீங்கள் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோங்க. கொஞ்சம் நல்லா சாப்பிடுங்க பிறகு ஆசுவாசப்படுத்தி கொண்டு வேலையை தொடங்குங்கள். ஒரே மூச்சாக வேலை செய்தால் உடல் அசைதி வரும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய சிந்தனைகள் உருவாகும். புதுப்புது கண்டுபிடிப்புகளின் மூலம் உற்சாகமடைவீர்கள். நம்முடைய புத்திக்கா இத்தனை விஷயங்கள் எட்டுது, என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும் நாள். முன்னேற்றம் அடையும் நாள். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். கணக்கு வழக்குகளை முதலீடு செய்பவரே அமர்ந்து பார்த்தால் தான் தொழில் ஒழுங்கா நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக அமையும். குடும்பத்தில் உறவுகளுக்குள் இருந்த சண்டை ஒரு முற்றுப்புள்ளி வரும். குறிப்பாக மாமியார் மருமகள் புரிதல் இன்மை காரணமாக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாள் இது. அளவோடு சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக சாப்பிட்டால் இன்று பிரச்சனை இல்லை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலட்சிய இருக்கும். எதுவாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். இதனாலேயே உங்களுடைய வேலைகள் மலை போல் குவிந்திருக்கும். அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள், வேலை சுமை குறைய வேண்டும் என்றால் இன்றைய நாள் வேலையை சரியாக பாக்கணும். சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது பார்த்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று சந்தோஷத்தோடு ஊரை சுற்றப் போகிறீர்கள். சுப செலவு ஏற்படும். கூடவே சேர்த்து அலைச்சலும் இருக்கும். நாளைக்கு வேலைக்கு செல்லனும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நேரத்தோடு வீடு திரும்புவது நல்லது. முன்பின் தெரியாத இடத்திற்கு யோசிக்காமல் குடும்பத்தோடு செல்ல வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். பொன் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மன குழப்பம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று தெளிவு இருக்காது. வாய்ப்புகள் நிறைய வரும். எந்த வாய்ப்பை தட்டிக் கழிப்பது, எந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வது என்று தெரியாமல் குழம்புவீர்கள். பொறுமையாக இருங்க. அனுபவ சாலியிடம் ஆலோசனை கேளுங்க. டக்குனு எந்த முடிவையும் எடுக்காதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல உறக்கம் இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறியது போல மன திருப்தி அடைவீர்கள். மனைவியின் அன்பு கிடைக்கும். பிள்ளையின் அன்பும் கிடைக்கும். உங்களைப் போல கொடுத்து வைத்தவன் இந்த உலகத்தில் இல்லை என்பது போல இன்றைய வாழ்க்கை ராஜா போல இருக்கும்.

- Advertisement -