இன்றைய ராசிபலன் – 17 பிப்ரவரி 2024

Rasi-palan-new17
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்தையும் தைரியத்தோடு செய்ய முடியாத மனநிலை உங்களுக்கு இருக்கும். கொஞ்சம் தோல்விகள் கூட வரும். ஆனாலும் நீங்கள் துவண்டு போய் உட்கார கூடாது. தோல்விகளுக்கு ஒரு நாள் கூட ஆயுசு இல்லை. தோல்வியை தைரியத்தோடு திரும்பிப் பார்த்தால், தோல்வியே தோற்றுப் போகும். ஆகவே இன்று நீங்கள் தைரியத்தோடு செயல்படுங்கள். கஷ்டங்களைக் கண்டு துவண்டு போகாதீங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் நல்ல பெயர் கிடைத்தாலும், சின்ன சின்ன எதிரிகளின் பிரச்சனை இருக்கும். அடுத்தவர்களுடைய பொறாமைப் பார்வை உங்களை நோக்கி திரும்பும். இதனாலேயே உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது நடக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளை கொஞ்சம் ஒதுக்கியே வையுங்கள். நல்லவனாக இருக்கலாம். ஆனால் ஏமாளியாக இருக்கக் கூடாது ஜாக்கிரதை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு தரும் நாளாக இருக்கப் போகின்றது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ப்ரமோஷன் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தின் மீது கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எந்த அளவுக்கு வேலை முக்கியமோ வியாபாரம் முக்கியமோ அந்த அளவுக்கு குடும்பமும் முக்கியம் என்பதை நீங்கள் இன்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளுடைய பலத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு கஷ்டம் என்ற சூழ்நிலையில், உங்க சகோதர சகோதரிகள் வந்து உதவி செய்வார்கள். மன நிறைவான நாள் இது. வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு காணப்படுவீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்து வந்த அசௌகரியங்கள் எல்லாம் சௌகரியமாக மாறும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று எதிர்பாராத சிக்கலை எதிர்கொள்வீர்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றம் ஏற்படும் நேரத்தில் முன்கோபடக்கூடாது அவசரப்படக்கூடாது. நிதானமாக சிந்திக்க செயல்பட வேண்டும். பெரியோர்களின் ஆலோசனையை பெற வேண்டும். அவசரம் என்று வரும்போது தான் நம்முடைய புத்தி கூட தடுமாறச் செய்யும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. இந்த மாதிரி சமயத்தில் புத்தி சொல்வதை கேட்காமல் மனசு சொல்வதைக் கேட்கணும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. எடுத்த காரியங்கள் உடனடியாக வெற்றியைத் தரும். புது வேலை தேடுவது இடமாற்றம் போன்ற முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு லக் அடிக்க போகின்றது. மனதிற்கு பிடித்த விஷயங்களை வெளிப்படையாக பேசுங்கள். இன்று சுப காரியங்கள் நடக்கக்கூடிய நாள். ரொம்ப நாளா நீங்க ஆசைப்பட்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தால் வாங்கலாம். நீண்ட நாட்களாக காதலை வெளியில் சொல்லாமல் இருந்தவர்கள் இன்று காதலை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் கடமைக்காக உங்களுடைய வேலையை செய்ய போறீங்க. ஆனால் இது ரொம்ப ரொம்ப தவறு. கடமைக்காக செய்யக்கூடிய வேலை நமக்கு நன்மையை கொடுக்காது. எந்த வேலையாக இருந்தாலும் மனதார செய்யணும் அப்படிங்கற ஒரு ஆர்வத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் நிறைய பேரிடம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. கவனக் குறைவோடு இன்று நடந்து கொள்ளக் கூடாது ஜாக்கிரதை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்க போகின்றது. எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் பொருப்போடு கொஞ்சம் நடந்து கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் எதிர்பாராத நட்பை கூட்டு சேராதீங்க. உங்களை படிக்க விடாமல் தடுக்க வாய்ப்புகள் உள்ளது. மற்றப்படி வேலை தொழிலில் எந்த ஒரு சிரமமும் இருக்காது. கல்விப் பயில்பவர்கள் மட்டும் இன்று கொஞ்சம் கூடுதல் கவனதுடன் இருந்தால் போதும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று எதையாவது சாதித்தே ஆகவேண்டும் என்று சில பல முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் ஆர்வக்கோளாறு இன்று அடக்கி வைக்கவே முடியாது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இருந்தாலும் சின்ன சின்ன எதிரிகள் தொல்லை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடனடியாக ஒருவன் வாழ்க்கையில் மேலே உயர்கிறான் என்றால் அவனுக்கு நண்பன் கூட எதிரி தான்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாது. வாழ்க்கைத் துணையின் உதவியை நாடுங்கள். தனியாக எந்த முடிவையும் எடுக்காதீங்க. நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு முடிவுகளை எடுப்பது குடும்பத்திற்கு நன்மையை தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனதுக்குப் பிடித்த நல்லதெல்லாம் நடக்கப் போகின்றது. பிடிக்காத விஷயங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகப் போகின்றது. கவலைப்படாதீங்க இறைவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சோம்பேறித்தனத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். அடுத்தவர்கள் சொல்வதை முழுமூச்சோடு நம்பாதீங்க. எதுவாக இருந்தாலும் சுய புத்தியோடு செயல்படவும்.

- Advertisement -