இன்றைய ராசிபலன் – 17 மார்ச் 2024

Rasi-palan-new17
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காண கூடிய நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்தாலும், எந்த சோம்பேறித்தனமும் இல்லாமல் உங்களுடைய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத வரவு இருக்கும். மனநிறைவோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத வேலைகளை இன்று கையில் எடுக்கலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை எல்லாம் சரி பார்ப்பது இது போன்ற வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறு வர வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணி குடிங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மாமியார் மருமகள் உறவு பலம் பெரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். மூன்றாவது மனிதரை நம்பாதீங்க.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று 24 மணி நேரம் போதாது. ஓயாமல் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நாலு கை இருந்தாலும் இன்று பத்தாது. வேலையோடு சேர்த்து ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். டென்ஷன் ஆகாமல் வேலை பாருங்கள். தொழிலில் லாபம் நிறைந்த நாள் இது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கப் போகிறீர்கள். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். மனசு நிறைவாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்ற பாராட்டும் புகழும் சேர்ந்த நாளாக இருக்கப் போகின்றது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் கூட உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை இருட்டிப்பாக இருக்கும். குழந்தைகளை கவனிக்கவே நேரம் இருக்காது. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடிங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும் நாளாக இருக்கப் போகின்றது. தொலைபேசியின் மூலம் தொல்லை வரும். கூடுமானவரை மனதிற்கு பிடிக்காதவங்க, தேவையில்லாதவர்கள் ஃபோன் பண்ணா எடுக்காதீங்க. அப்போதுதான் இன்றைய நாள் சந்தோஷமாக செல்லும். வேண்டாத விஷயத்தில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன வியாபாரிகள் கூட இன்று சூப்பராக கல்லா கட்டுவீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வரவு உண்டு. கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். செலவுக்கு ஏற்ற பணம் கையில் இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கும் இன்று நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் மூத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். சொந்தபந்தங்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது.

மகரம்


மகர ராசி காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி நேரத்தை கழித்து விடுவீர்கள். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் உண்டு. சோஸியல் மீடியாவில் இருப்பவர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்களை கமெண்ட் பண்ணாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையை தொட்டாலும் சந்தேகம், யாரிடம் பேசினாலும் சந்தேகம், என்ற கண்ணோட்டத்தோடு இருப்பீர்கள். இதனால் உங்களுடைய நிம்மதி இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை சந்தேகப்படக்கூடிய இடத்திற்கு போகாதீங்க. சந்தேகப்படக்கூடிய நபரிடம் பேசாதீங்க. அப்போதுதான் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சங்கடங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. யாரை எப்படி கவனிப்பது, யாரிடம் எப்படி பேசுவது, என்று தெரியாமல் கொஞ்சம் சிரமம் இருக்கும். கவலைப்படாதீங்க, அந்த ஆண்டவனின் ஆசிர்வாதத்தால் உங்களுக்கு நல்லதே நடக்கும். வாழ்க்கை துணை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

- Advertisement -