இன்றைய ராசிபலன் – 17 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படக்.கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை கூடும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தாமதமாகும். மனதில் குழப்பமான நிலை இருக்கும். கணவன் – மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பெரிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்க வேண்டும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் மனதில் குழப்பங்கள் இருக்கும். உடல் சோர்வு அதிகரிக்கும். கொடுத்த கடன் வசூல் ஆவதில் இழுபறி நிலை நீடிக்கும். எடுத்த காரியங்களில் தடங்கல்கள் ஏற்படும். பணியிடங்களில் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் உடல் மற்றும் மனம் உற்சாகத்துடன் செயல்படும். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். தொழில், வியாபாரங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் செயல்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் லாபங்கள் இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நேரடி, மறைமுக எதிரிகள் விலகி ஓடுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பணவரவு இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களை சரியான நேரத்தில் முடிக்க இயலாமல் போகும். குடும்பத்தினரிடம் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதில் இழுபறி நிலை உண்டாகும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பழைய கடன் பாக்கிகளை வட்டியுடன் அடைத்து முடிப்பீர்கள். வீட்டில் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிலர் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பணம் தொடர்பான விவகாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் மற்றும் மனம் உற்சாகமாக செயல்படும். நீண்ட நாள் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

- Advertisement -