இன்றைய ராசிபலன் – 17 ஏப்ரல் 2024

Rasi-palan-new17
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் எதுவும் இருக்காது. சந்தோஷம் நிறைந்த நாளாக தான் இருக்கும். யாராவது உங்களை கிண்டல் செய்யும்படி பேசினால், அதை பெருசாக எடுத்துக்காதீங்க. நகைச்சுவை உணர்வோடு பழகுங்கள். இல்லையென்றால் நெருங்கிய உறவுகள் நண்பர்களிடம் இருந்து விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் இன்று ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. சின்ன சின்ன தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சந்தோஷம் பெருகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் பிளான் செய்து வைத்திருந்த காரியங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக முடியும். சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பாராட்டை பெறுவீர்கள். நல்ல மனிதர் உயர்ந்த மனிதர் என்ற அந்தஸ்தும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைவாக இருக்கும். ஆனால் அதிகமாக பேராசைப்படக்கூடாது. உங்களுக்கான வேலை என்ன அதை பாருங்கள். உங்களுடைய தகுதி என்ன கிடைக்குமோ, அது கட்டாயம் கிடைக்கும். அளவுக்கு மீறி ஆசைப்படாதீங்க. ஆழம் தெரியாமல் சில விஷயங்களை காலை வைக்காதீர்கள். பெரிய அளவில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் கூட அதை இன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். காசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ரொம்ப கவனம் இருக்கட்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷமாக குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையில் கூடுதல் சுமை இருக்கும். மேல் அதிகாரிகளிடம் கவனமாக பேசுங்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரும். அனுசரித்துச் சென்றால் பிரச்சனை கிடையாது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதுப்புது ஐடியாக்கள் சக்சஸ் ஆகும். தொழில் பல மடங்கு உயர்ந்த நிற்கும். எதிர்பாராத வரவு சந்தோஷத்தை கொடுக்கும். கடன் சுமையை குறையும். வீட்டிற்கும் மனைவிக்கும் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புது வரவு இருக்கப் போகின்றது. காதல் கைகூடும். வீட்டில் சுபகாரிய தடை விலகி சுப செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குறிக்கோளை அடையக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிரிகளிடம் சவால் விட்டு போராடியவர்களுக்கு எல்லாம் இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து வாழக்கூடிய தருணம் உண்டாகும். மனதிருப்தியோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள். உறவினர்களின் சப்போர்ட்டும் நண்பர்களின் சப்போட்டும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். எல்லா விஷயத்தையும் ஆழமாக யோசித்து யோசித்து குழம்பி போகப் போகிறீர்கள். தெளிவான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால் கவனம் சிதறும். வேலையில் சின்ன சின்ன தவறுகள் உண்டாகும். கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருங்க. தேவையில்லாத பிரச்சனையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு நல்லதே நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வெற்றிவாகை சூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வேலையை எல்லாம் முடித்துக் கொடுத்து விடுவீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எல்லா விஷயத்திலும் கவனமாக இருங்கள். தொழிலில் ஏமாளியாக இருக்காதீங்க. எல்லாரையும் நம்பி கடன் கொடுக்காதீங்க. பணம் சம்பந்தப்பட்ட இழப்புகள் இன்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மாலை உங்களுடைய மனசு ரிலாக்ஸாக மாறிவிடும். உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக தொடங்கி விடுவீர்கள். நண்பர்கள்தானே என்று சொல்லிக் குடும்ப விஷயங்களை எல்லாம் வெளியாட்களிடம் உளறி வைக்க வேண்டாம். அது பிரச்சினையை கொடுத்து விடும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பாகவே ஊர் முழுவதும் தம்பட்டம் அடிக்காதீங்க. கடன் வாங்கி செலவு செய்யாதீர்கள். சொந்த பணத்தையே சிக்கனமாக செலவு செய்தால் உங்களுக்கு பிரச்சனை வரும். இதில் கடன் வாங்கி செலவு செய்தால் சொல்லவா வேணும் நிச்சயம் பிரச்சனை வரும். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.

- Advertisement -