இன்றைய ராசிபலன் – 17 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியின்ருக்கு இன்றைய தினம் மனோதைரியம் கூடும். தொழில், வியாபாரங்களில் சிறப்பான லாபங்கள் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் நீடித்த பிரச்சினைகள் தீரும். பிரிந்து தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். மக்கள் செல்வாக்கு கூடும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் இன்பமான நாளாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வாங்கிய கடன்களை வட்டியுடன் திரும்ப செலுத்துவீர்கள். விருந்து உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பணவரவு ஏற்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். சிலருக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படும் என்றாலும் அதை சமாளித்து விடுவார்கள். உறவினர்கள் ஒரு சிலருக்கு தர்ம சங்கடம் உண்டாகும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் உங்கள் கனவுகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு கொடுக்கல் – வாங்கல்களில் இழுபறி நிலை இருக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகளை உயரதிகாரிகள் ஏற்பார்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணியதெல்லாம் துலங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் பொருளுதவி கிடைக்கும். வீட்டிலிருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிலர் திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் சுமாரான நாளாகவே இருக்கும். உடலிலும் மனதிலும் சோம்பல் இருக்கும். ஒரு சிலருக்கு பெண்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் தன்னம்பிக்கை பெருகும். சவாலான காரியங்களை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். ஒரு சிலர் மருத்துவ ரீதியான செலவுகளை சந்திக்க கூடும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகம் மிகுந்ததாக இருக்கும். பெரியவர்களின் ஆசிகள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும்.

தனுசு:
தனுசு ராசிக்கு இன்றைய தினம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சிலர் புதிய வீடு, வாகனங்களை வாங்குவார்கள். நண்பர்கள் மூலம் சிலருக்கு தனவரவு இருக்கும். பணியிடங்களில் உங்களுக்கான செல்வாக்கு பெருகும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் புகழ் கூடும். வரவேண்டிய கடன் தொகை சரியாக வந்து சேரும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்கின்ற வாய்ப்பு அமையும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சிறிது அலைச்சலுக்கு பிறகு ஆதாயம் இருக்கும். பணிச்சுமையால் சிலர் மனசோர்வு அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். சிலருக்கு வீண் பொருள் விரயங்கள் ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பொறுமை தேவைப்படும். எதிலும் விட்டுக்கொடுத்து செல்வது நலம். சிலர் பொருளாதார நெருக்கடிகளால் எதிலும் போராட வேண்டிய நிலை இருக்கும். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

- Advertisement -