இன்றைய ராசிபலன் – 17 ஜூன் 2024

Rasi-palan-new17
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன் தொகை வசூல் ஆகும். சொத்து பிரச்சனை தீரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். ஏதோ ஒரு வகையில் பணம் காசு நிறைய கையில் பார்க்கலாம். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு இருப்பீர்கள். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்திற்குள் முடித்துக் கொடுத்து நல்ல பெயரும் வாங்குவீர்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். வந்த சிக்கல் வந்த வழி தெரியாமல் சரியாகிவிடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரலாம். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. கவனக்குறைவோடு வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளிடம் திட்டுவாங்க வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை தொழிலில் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் வரும். டென்ஷன் ஆகவே இன்றைய நாள் நகர்ந்து செல்லும். டார்கெட் தொல்லை இருக்கும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை எல்லா வேலைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் அவசியமான வேலையில் மட்டும் ஆர்வம் காட்டுங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வு இருக்கும். இருக்கிற வேலையை முடிப்பதற்கு நேரம் இருக்காது. இதில் புதிதாக வேலைகள் வந்து தலை மேல் விழும். இல்லத்தரசிகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ரொம்பவும் டென்ஷனோடு வேலை செய்யாதிங்க. வேலை பளுவை குறைக்க பாருங்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்ததை விட நல்ல வருமானம் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிறைய ஆக்கப்பூர்வமான நல்ல விஷயங்களை செய்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். குடும்பம் குழந்தை குட்டி என்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். இன்று மாலை நேரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது கவனத்தோடு இருக்கவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் கலைஞர்களுக்கு சாதனை புரியக்கூடிய நாளாக இருக்கும். தொழிலில் மேலும் மேலும் முன்னேற்றம் கிடைக்கும். புதிய முதலீட்டை செய்யலாம். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் சரி மூன்று வேலை நல்லபடியாக சாப்பிட்டு உங்களுடைய நேரத்தை நகர்த்திச் செல்வீர்கள். அடுத்தவர்களை பற்றி ஒரு துளியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றி யாராவது தவறாக பேசினால் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் செல்வீர்கள். எல்லோருக்கும் புரியும்படி சொல்ல போனால் டேக் இட் ஈசி பாலிசி என்று வாழ்க்கையை கடப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். உங்களைப் பார்த்து நாலு பேர், நாலு நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். பொறுப்போடு இன்றைய நாளை நீங்கள் கடந்த செல்வீர்கள். வேலை செய்யும் இடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மன நிறைவான நாள் இது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. வேலைக்கு போவீங்க ஆனா சரியா வேலையை செய்ய மாட்டீங்க. சின்ன சின்ன திட்டு வாங்குவீங்க. பிறகு வேலை செய்ற மாதிரி ஆக்ட் கொடுப்பீங்க. அவ்வளவுதான் இன்றைய நாள் முழுவதும் இப்படியே நகர்ந்து செல்லும். சில பேர் மனைவியிடம் திட்டு வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொன் பொருள் சேர்க்க இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பெரிய பணக்காரராக இருக்க கூட வாய்ப்பு இருக்கு. ஆனாலும் சேமிப்பில் கவனம் காட்டவும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வரும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் மன கஷ்டம் இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை பிரிய கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். உதாரணத்திற்கு வேலைக்கு வெளிநாடு செல்வீர்கள், அல்லது பத்து நாள் வெளியூர் சென்று வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இதனால் சின்ன வருத்தம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் உபாதைகள் தீரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும் மனைவிக்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். நீண்ட நாள் தவறை திருத்திக் கொள்வீர்கள். வியர்வை சிந்தி உழைத்தால் தான் வருமானம் பெருகும் என்பதை உணர்வீர்கள். வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

- Advertisement -