இன்றைய ராசிபலன் – 17 நவம்பர் 2022

today rasipalan nov 17 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நீங்கள் முடியாது என்று நினைத்த விஷயத்தை கூட முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனாவசிய பயணங்களை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே விரிசல் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு எனவே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் மந்தநிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம் எனவே தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தள்ளிப் போகலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் உடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிவு தேவை.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்புகளை பெற இருக்கிறீர்கள். தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் கூடுதல் அக்கறை தேவை. பூர்வீக சொத்து பிரச்சனைகளை வளர்க்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் பட்டதை பேசி விடக்கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே பேசும் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் வரலாம். சுயதொழில் உள்ளவர்களுக்கு எண்ணிய லாபம் ஈட்டும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான யோகம் உண்டு.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் அதிகரிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் தேவையற்றவர்களை நுழைக்க வேண்டாம். சுய தொழில் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள் அவர்கள் மூலம் காரியமாகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருக்கும் அன்பு பெருகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்தது அப்படியே நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் மற்றவர்களுடைய கருத்துகளையும் கேட்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தான்தோன்றித்தனமாக செயல்பட வேண்டாம். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் போன போக்கில் செல்வீர்கள். மற்றவர்களை மட்டம் தட்டி பேச வேண்டாம். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் ஊடல்கள் மெல்ல மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தனலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மனக்குழப்பங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம் எனவே தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம். கணவன் மனைவியிடையே பொறுமை தேவை. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் அனுபவம் கை கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது. ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதியை காணலாம். கணவன் மனைவியிடையே சிறு பனிப்போர் நடக்கலாம், தேவை இல்லாமல் பேசியே பெரிதாக்க வேண்டாம். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் வரலாம். பகைவர்கள் எண்ணிக்கை அதிகாரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனே கவனிப்பது நல்லது.

- Advertisement -