இன்றைய ராசி பலன் – 17-05-2021

rasi palan - 17-5-21
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எளிதில் எதையும் நம்பி விடாதீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் பலரும் உங்களுக்கு நன்மை தான் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்புற அமைய புதிதாக யோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சக பணியாளர்களுடன் இருந்து வந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சிந்திக்கும் திறமை வளரும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாதீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கெட்டியாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் நண்பர்களின் ஆதரவு வலுவாகும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் மேலும் வலுவாக கூடும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பிரச்சனை இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலூட்டும் வகையில் அமையும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கான பாதை சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் மந்த நிலை மாறும். குடும்பத்தில் தாய் வழி உறவினர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் நேர்மாறாக நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இனம் புரியாத யோசனை இருந்து கொண்டே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி காணலாம்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குறைகளை நீக்குவதற்கு குடும்பத்தாரும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை உண்டாகும். தொழில்மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும் நாளாக அமைய இருக்கிறது. வார்த்தைகளை வீசி பின் திரும்ப அள்ளுவது என்பது முடியாத காரியம் என்று நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காண்பீர்கள். நீங்கள் மனதில் நினைக்கும் விஷயம் ஒன்று இனிதே நடைபெறும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சில தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ள வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடியே நடக்கும். தொழில் வியாபாரத்தில் தொடர்ந்து மந்த நிலையில் காணப்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். அதில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். மேல் அதிகாரிகளின் தொந்தரவும் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த சகோதர பிரச்சினைகள் தீரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருவது வரட்டும் என்ற மனப்பான்மையில் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை விட சில விஷயங்கள் ஒருபடி மேலே சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சாதுரியமான பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதாக ஈர்ப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்கள் எதிராக திரும்ப வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பம் தீர இறை வழிபாடு செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் நபர்களின் வருகையால் உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காலதாமதம் ஏற்படும்.

- Advertisement -