இன்றைய ராசிபலன் (17 செப்டம்பர் 2021)

Rasi palan 17 sep 2021
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் கொடுக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை காண போராடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்யம் சீராக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதும் நல்லது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு உத்வேகம் பிறக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் விடாப்பிடியான முயற்சியால் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வேலையில் ஆர்வம் இருக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். வெளியிட பயணங்களின் மூலம் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். பெண்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து உபயோகமாக முயற்சிப்பது நல்லது. பிள்ளைகள் வழியே சில தொல்லைகள் வந்து நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயங்களில் எதிர்மறையான பலன்கள் உண்டாக வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற நிலை மாறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எதையும் அதன் போக்கில் விட்டு விட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சூழ்நிலை சுமுகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முயற்சி தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்க இருக்கிறது. ஒரு குழப்பமான மனநிலை நீடிக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட ஒரு படி மேலே ஏற்றத்தை காண இருக்கிறீர்கள். தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். உத்யோகத்தில் அமைதி இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினை தீரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் புதிய பாதை தென்படக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. போராட்ட நிலை மாறி அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுய தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி சுமுகமான சூழ்நிலை நிலவும். புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதைவிட வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாண்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக விரையங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். முயற்சிகளில் ஈடுபடும் முன் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு என் மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். எதிர்பாராத நபர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை தரும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் மேம்பட அக்கறை தேவை.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் அமைதி காணலாம். அக்கம்பக்கத்தினர் இன் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் பாராட்டைப் பெறும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -