இன்றைய ராசிபலன் – 18 ஜனவரி 2024

Rasi-palan-new18
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று நடக்கக்கூடிய சம்பவங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் சீரியஸ்னஸ் தேவை. உங்களின் எதிராளிகளை குறைத்து எடை போடாதீர்கள். எதிராளிகளின் பலம் என்ன என்று தெரிந்து கொண்டு மோதினால் எளிதில் வெல்லலாம். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் உஷாராக இருக்கணும். தெரிந்தவர்கள் தானே என்று நம்பி பணத்தை தூக்கிக் கொடுக்காதீங்க. அந்த பணம் நிரந்தரமாக வராமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சந்தோஷமாக இருக்கப் போறீங்க. நீங்கள் என்ன மனதில் நினைத்து வைத்திருக்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். உங்கள் மனசுக்கு பிடித்தவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அலுவலகப் பணி கஷ்டம் இல்லாமல் சுலபமாக முடியும். தொழிலின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து பண உதவிகளும் கேட்காமலே கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மதியம் வரை சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும், மதியத்திற்கு மேல் எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்து முடிந்துவிடும். பிரச்சனைகளிலிருந்து வெளிவந்து விடுவீர்கள். ஆக காலை நேரம் மட்டும் கொஞ்சம் உஷாராக இருக்கணும். உங்களுடைய வேலையை கொஞ்சம் முன்கூட்டியே முடிக்கணும். இருசக்கர வாகனத்தில் வண்டியில் செல்பவராக இருந்தால், அரை மணி நேரம் முன்னாடியே வீட்டில் இருந்து கிளம்புங்க. அவசரம் அவசரமா வண்டி ஓட்டிட்டு போகாதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இந்த பண்டிகை செலவை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் ஒரு பக்கம் வந்துவிடும். அதனால் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்காது. ஆனால் வேலையிலும் தொழிலிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வழக்கத்தைவிட சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் நடந்து கொண்டால் தான், போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் உங்களால் ஜெயிக்க முடியும்‌. அடுத்தவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று யோசித்து யோசித்து பேசாதீங்க. இன்று மனதில் பட்டதை பேசினால் நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று எந்த வகையிலும் ரிஸ்க் எடுக்கக் கூடாது. முன்பின் தெரியாத தொழிலில் காலை வைக்கக்கூடாது. யாரோ ஒருவர் சொல்கிறார்கள் என்று, எந்த விஷயத்திலும் பணத்தை முதலீடு செய்யாதீங்க. உஷாரா இருந்துக்கோங்க. ஐநூறு ரூபாய் போட்டா, ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று யாராவது சொன்னால் அதை நம்பவே கூடாது. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அறிவா பேசுறீங்கன்னு சொன்னாலும் ஐஸ் வச்சு ஏமாத்த பார்க்கிறாங்க நம்பவே நம்பாதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பும் உயர்வும் முன்னேற்றத்தை கொடுக்கும். சோம்பேறித்தனத்தை வார்த்தையால் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது. காலையில் எழுந்துக்கணும். நாளைக்கு தேவையான வேலையை இன்றே செய்து முடிக்கணும். அப்போதுதான் இந்த வாரம் உங்களுக்கு நல்லது நடக்கும். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டாலும் திட்டு வாங்குவீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனவருத்தமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் எதையாவது பேசி உங்களை காயப்படுத்தி விடுவார்கள். சில பேருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து அழ கூடிய அளவுக்கு சண்டைகள் வரும். குறிப்பாக கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடக்கணும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். எதையும் எதிர்த்து போராடும் தைரியத்தையும் மனப்பக்குவத்தையும் வர வைத்துக் கொள்ளுங்கள். உடைந்து போகாதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எந்த புது முடிவையும் எடுக்கக்கூடாது. புது மனிதர்களிடம் பேசவோ பழகவோ கூடாது. அன்றாட வேலையை மட்டும் சரியாக செய்தால் போதும். காதல் கசக்கும். கணவன் மனைவி உறவுகள் மோதல் உண்டாகும். வாக்குவாதம் செய்யவே கூடாது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு போகாதீங்க. சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போடாதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். நல்லது தான் நடக்கும். ஆனால் நீங்கள் அந்த நல்லதை நிராகரித்து விடுவீர்கள். உங்களை அறியாமலேயே சில நல்லதை விட்டுவிட்டு கெடுதலை செலக்ட் பண்ணிடுவீங்க. பிறகு கன்னத்தில் கை வைத்து கஷ்டப்பட்டு என்ன பலன். ஆகவே எந்த பிரயோஜனமும் இல்லை. இன்று எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பெரியவர்கள் சொல்பேச்சு கேட்கவும். அடம் பிடித்து சில விஷயங்களை சாதிக்காப்பால் இருப்பது தான் நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் மனதை அலைபாய விடக்கூடாது. பேராசை பெரு நஷ்டம் ஆகிவிடும். பகல் கனவு காணாதீர்கள், உழைத்தால்தான் சோறு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். குறுக்கு வழியில் சம்பாதிக்க மனம் அலைபாயக் கூடாது. அரசாங்கத்துக்கு எதிரான வேலைகளை செய்யக்கூடாது.

கும்பம்


கும்ப ராசி நேயர்களுக்கு இன்று வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் அதை சேமிக்க வழியை தேடுங்கள். அனாவசியமாக செலவு செய்யாதீங்க. வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கவும். சிக்கனத்தை கையாண்டால் பிரச்சனை இல்லை. உன் கோபத்தை குறைக்கவும். மேலதிகாரிகளோடு அனுசரணையாக பேசவும். தலைக்கனத்தோடு நடக்கக்கூடாது. கர்வம் உங்களுக்கு கஷ்டத்தை மட்டும் தான் கொடுக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் கொடுக்கக்கூடிய பிரஷரை தாங்கும் அளவுக்கு சக்தி தேவை. மனதையும் உறுதியா வச்சுக்கோங்க. உடம்பையும் உறுதியாக வச்சுக்கோங்க. டார்கெட்டை முடிக்க சொல்லி சில பேருக்கு டார்ச்சர் இருக்கும். வாழ்க்கை துணையிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள் சின்ன சண்டை பெருசாக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -