இன்றைய ராசி பலன் -18-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்யாதீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகக்கூடும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். இன்று விடுமுறை என்பதால் வியாபாரத்தில் கூடுதலான விற்பனை இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
சிலர் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். இன்று எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். மலையில் நண்பர்கள் வீட்டிற்கு செல்விர்கள். வியாபாரம் இன்று விறுவிறுப்பாக காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் விருப்படி நடந்து கொள்வீர்கள், அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கும் யோகம் வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

கடகம் :
Kadagam
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:
simam
சகோதரர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணைவியல் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பயணங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபா காரியங்கள் நடக்கக்கூடும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகக்கூடும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

துலாம்:

சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சரிசெய்து விடுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைக்க வேண்டாம், அது உங்களுக்கு பாதகமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்:

இன்று உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.உடம்புக்கு ஆகாத உணவுகளை தவித்துவிடுங்கள். குடும்பத்தாருடன் ஆலோசனை செய்த பிறகே புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். பிள்ளைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் செலவுகள் உண்டாகும்.

தனுசு:

இன்று அனுகூலமான நாள். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் கடன் வாங்க நேரிடும். நண்பர்களுடன் பயணம் செய்ய நேரிடும். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

மகரம்:
magaram

பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்விர்கள். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரக்கூடும். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியல் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

மகிழ்ச்சியான நாளாக அமையும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள்.புதிய முயற்சிகளில் சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆபரணங்களை வாங்கும் யோகம் வரும்.

மீனம்:

நீங்கள் முயற்சிக்கும் காரியங்கள் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். கணவன் மனைவிக்குள் அந்நொனியம் ஏற்படக்கூடும். பிராத்தனைகளை நிறைவேற்ற குலதெய்வ கோவில்களுக்கு செல்விர்கள். வியாபாரம் எதிர்பார்த்த படுயே கூடுதலான லாபம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -