இன்றைய ராசிபலன் – 18 பிப்ரவரி 2024

Rasi-palan-new18
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாகத்தான் இருக்கும். இன்று விடுமுறை நாள் என்பதால், இதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் ஒரு பிளான் வச்சுக்கோங்க. பிளான் இல்லாமல் இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சொதப்பிவிடும். குடும்ப பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து செல்லவும். உறவுகளுக்குள் சண்டை வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புத்திசாலித்தனம் ரொம்ப ரொம்ப தேவை. யோசிக்காமல் ஏதாவது அவசர முடிவை எடுத்தால் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஏதேனும் மந்தமான சூழ்நிலை இருந்தால் புதிய முடிவுகளை எடுக்காதீங்க. முக்கியமான வேலை செய்வதை நாளை தள்ளி போடவும். பொறுமையை இழந்து கோபத்தோடு எடுக்கும் முடிவுகள் என்னைக்கும் சரியா வராது. தொழிலில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இதனால் பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் கூட வர வாய்ப்புகள் உள்ளது. செலவை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தால், வாங்கித்தான் ஆகணும். அதுக்காக கந்துவட்டி பக்கம் போகாதீங்க. தொழிலில் முதலீட்டில் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும்போது அவசரப்படக்கூடாது. பெண்கள் சமையல் அறையில் சமைக்கும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது எல்லாம் கூடுதல் கவனம் இருக்கட்டும். மற்றபடி இன்று மகிழ்ச்சியின் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மன உறுதியோடு செயல்படுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். எவ்வளவு கஷ்டமான வேலையை கொடுத்தாலும், அதை நீங்க ஈஸியா முடிச்சிருவீங்க. இதனால் வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டு கிடைக்கும். இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் சில வேலைகள் உங்களைத் தேடி வரும். அதை மறுக்காமல் முடித்துக் கொடுத்தால் நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லாதீங்க கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டு வேலை செய்யாமல் இருந்திடாதீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் வாக்கு கொடுக்காதீங்க. கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்றால் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபடக்கூடாது, யாரையும் எடுத்துரிந்து பேசக்கூடாது. மேலதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தான் ஆகணும் ஜாக்கிரதையா இருங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கவன குறைவாக எந்த வேலையையும் செய்யக்கூடாது. குறிப்பாக வார்த்தைகளில் கவனம் தேவை. முன்கோபடாதீங்க, அடுத்தவர்களை எடுத்து தெரிந்து பேச வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து ஏதேனும் கைபேசி அழைப்பு வந்தாலும் பொறுமையாக பேசவும். பிரச்சனைகளில் தீர விசாரிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு காணப்படும். மனசு ரொம்ப ரொம்ப பலவீனமாக இருக்கும். யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா உடனே அழ தொடங்கி விடுவீர்கள். ஆண்கள் அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளிவர கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும். வீட்டில் பின்தங்கி இருந்த வேலைகளை எல்லாம் செய்து முடிப்பதற்கான நேரமும் காலமும் வந்துவிடும். வாழ்க்கை துணையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். காதல் வெளிப்படும். சில வீடுகளில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடப்பதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கூடுதல் உழைப்பை போடுங்கள். எந்த ஒரு வேலையையும் ஈசியாக முடிக்கலாம் அப்படின்னு நினைக்கக் கூடாது. கஷ்டப்பட்டால் மட்டுமே இன்று உங்களுக்கு பலன் உண்டு. வேலை செய்யும் இடத்தில் வேலை பளு இரட்டிப்பாக இருக்கும். டார்கெட்டை முடியாதவர்களுக்கு திட்டு விழும். சமாளித்து தான் ஆக வேண்டும். தொழிலில் சவாலாக நிறைய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளை எதிர்த்து போராடுவதே ஒரு பெரிய டாஸ்காக இருக்கப் போகிறது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. சொந்த பந்தங்களிடையே கொஞ்சம் பொறுமையாக பேசுங்கள். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்காதிங்க. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் சில குழப்பமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் அளவோடு பழகுங்கள். குடும்ப விஷயம் ரொம்ப பர்சனல் விஷயங்களை பகிர வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் மனைவிக்கு உதவியாக நிறைய வேலைகளை செய்வீர்கள். காதல் வெளிப்படும். அன்பு அதிகரிக்கும். சந்தோஷம் குடும்பத்தில் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் ஃபோன் மூலம் வர வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை உங்களுக்கு பிடிக்காதவங்க எதிரிகள் சிக்கல் பிடித்தவர்கள் யாராவது போன் பண்ணா, எடுக்காதீங்க. ஞாயிற்றுக்கிழமை சந்தோஷம் கெட்டுப் போகிறோம்.

- Advertisement -