இன்றைய ராசிபலன் – 18 மார்ச் 2023

mar 18 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை குவிக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சண்டைகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி பாதையை நோக்கி பயணிக்க கூடிய முன்னேற்றம் தரக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கேட்ட தொகை கேட்ட இடங்களில் இருந்து கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பது தோல்வியடையும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். பதறாத காரியம் சிதறாது என்பதால் பதட்டப்பட வேண்டாம். சுய தொழிலில் லாபம் காண புதிய விஷயங்களை சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி பூர்த்தி அடையும். குடும்ப ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களின் முகம் கோணாமல் நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணப் பிரச்சினையை சந்திப்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நாள் மற்றவர்களுடைய பேச்சினால் எரிச்சல் அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாமல் அடுத்தவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகள் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

கன்னி:

- Advertisement -

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கு உரிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் விரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களில் பொழுது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் சில சிரமத்தை சந்தித்த பின் வெற்றிகளை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எளிதாக எதுவும் கிடைக்காது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சண்டை போட்டுக் கொண்டிருந்த அயலருடன் மீண்டும் இணக்கமாக செல்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் உபத்திரவம் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறப்பான முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி உறவிற்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டு முயற்சி எதிர்காலாத லாபத்தை கொடுக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகலாம்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தேவையற்ற எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் ஒழிவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்லும் இடங்களில் மரியாதை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சிகள் திருவினையாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாக வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. வீட்டில் ஆடம்பர சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -