இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2023

jun 18 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது, வீண் அலைச்சலை தவிர்க்கவும். குடும்ப உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொருளாதாரம் முன்னேற்றம் காண புதிதாக சிந்திப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த கனவுகள் நிறைவேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே கூடுதல் அக்கறையை காண்பிப்பது நல்லது. முயற்சிக்கு ஏற்ப பலன்களும் இருக்கும். கூட்டாக செய்யும் செயல்கள் பலன் தராத போகலாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எதிர்க்கும் துணிச்சலுடன் இருப்பீர்கள். இதுவரை பொறுத்தது போதும் என்கிற மனநிலை இருக்கும். முக்கிய முடிவுகளை சுயமாக எடுப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அயராத உழைப்பினால் முன்னேற்றம் காணக்கூடிய யோகம் உண்டு. குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகள் கிடைக்கும். இதுவரை இழுபறியிலிருந்து வந்த நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற சினம் தவிர்ப்பது நல்லது. பொது இடங்களில் அவமானப்பட நேரலாம் எனவே பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணத்தொகை வரும். வேலையில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்ததில் இடையூறுகள் ஏற்படலாம்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப் பின்பு செயல்படுத்துங்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் அவசர தேவைக்கு பணம் தேடி அலைய வேண்டியிருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். கண் முன் தெரியும் அநியாயத்தை தட்டி கேட்பீர்கள். வருமானம் உயர புதிய விஷயங்களை கற்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. முக்கிய விஷயங்களில் பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது நல்லது. நினைத்த ஒப்பந்தங்கள் கைகூடி வரும். குடும்பத்திற்கு சில தியாகங்களை செய்வீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்பலன் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்பார்த்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கரம் கிடைக்கும். அளவுக்கு மீறி அகலக்கால் எதிலும் வைக்காதீர்கள் பின்பு அவதிப்பட நேரிடும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுப காரியம் முயற்சிகளில் இருந்து மந்த நிலை மாறும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அலட்சியம் வேண்டாம். சிலருக்கு பணப்புழக்கம் குறையும். ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. திடீர் பயணங்கள் வீணான அலைச்சலை ஏற்படுத்தும். கொடுத்த வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் வரக்கூடிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ண ஓட்டங்கள் நேர்மறையாக இருப்பது நல்லது. புரியாத விஷயங்களில் தேவையில்லாமல் சிக்கி தவிக்காதீர்கள். கணவன் மனைவிக்குள் சந்தேகங்களை தவிர்க்க வேண்டும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -