இன்றைய ராசிபலன் – 18 ஜூலை 2022

today rasi palan 18/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இதுவரை இல்லாத புத்துணர்வு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எண்ணியவை நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வழிகள் பிறக்கும். ஆரோக்கியத்தை எச்சரிக்கையுடன் கவனியுங்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நினைத்தது நடக்கும். சுப காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமையை பயன்படுத்தி நினைத்ததை சாதிப்பீர்கள். தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் கடமையை செய்வதில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத பள்ளிகள் ஏற்படலாம் விழிப்புணர்வு தேவை. ஆடம்பர பொருட்களை கையாளுவதில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதி நற்பலன்களை கொடுக்கும். தேவையற்ற இடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் எனவே விழிப்புணர்வு தேவை. தொலைதூரப் போக்குவரத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனமாக செயல்படுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. தேவையற்ற டென்ஷன் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தெளிவு இருக்கும். நீங்கள் நினைத்ததை அடைய சற்று பொறுமை காப்பது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நற்செயல்கள் மூலம் நல்லது நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று முழு ஒத்துழைப்போடு செயல்படுவீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும் எனவே கவனமுடன் சிக்கனமாக இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் அடங்கும். நீங்கள் சொல்ல நினைப்பதை பணிவாக சொன்னால் அனைவரும் கேட்டுக் கூடும். வெட்டி பந்தா தேவையில்லை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறைய தொடங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் யோகம் உண்டு. எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுதல் கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆக்கம் தரும் நாளாக அமைய இருக்கிறது. குறிப்பாக செயல்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் ஒத்துழைப்பு தேவை என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றிகள் குவியும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை எளிதாக சாதித்து காட்டும் அமைப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன் கோபம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை சிந்தனை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய நாளாக இருக்கும். மற்றவர்களுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உதவிகள் கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆர்வக்கோளாறு ஏற்படலாம் பொறுமையாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிந்தனையை தெளிவாக கொள்வது நல்லது. தேவையற்ற விஷயங்களை போட்டு மனதில் குழப்பிக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எதிர்பார்ப்புகள் குறைவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அசதி ஏற்படும், ஓய்வு தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு எதுவும் சுலபமாக கிடைத்து விடாது. விடாமுயற்சி உங்களுடைய செயல்களுக்கு அனுகூல பலன் தரும். இறைவழிபாடுகளின் மீது அதிக ஆர்வம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றி காணலாம்.

- Advertisement -