இன்றைய ராசிபலன் – 18 நவம்பர் 2022

today rasipalan nov 18 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் அமைதியுடன் இருப்பது நல்லது. எதற்கு எடுத்தாலும் முன்கோபத்தை முன்னிறுத்தாமல் பொறுமையுடன் இருப்பது உத்தமம். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. நீங்கள் நினைத்த விஷயம் தடையில்லாமல் நிறைவேறும். கணவன் மனைவி உறவில் அன்பு பெருகும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உடல் சுகவீனம் அடையலாம் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப அக்கறை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீணாக அலைய வேண்டியிருக்கும் எனவே முன்னெச்சரிக்கை தேவை.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனைகள் குறுக்கு வழியில் போகலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட பன்மடங்கு லாபம் காணலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவன சிதறல் ஏற்படாமல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் சாதகமான பலன்களை கொடுக்கும் வண்ணம் அமைகிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் சிக்கல் வரலாம் எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பு ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விமர்சனங்களை புறக்கணிப்பது உத்தமம். குடும்ப பாரம் அதிகரிக்கும். சுய தொழிலில் நீங்கள் புதிய யுக்திகளை கையாளுவது முன்னேற்றத்தை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை கையாளுவது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமைகளை அலட்சியம் காட்டாமல் சரிவர பின்பற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான விஷயங்கள் எளிதாக முடிய கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றி வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும். நண்பர்களின் உதவிக்கரம் தேவையான சமயத்தில் கிட்டும். குடும்ப சுமைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். சுய தொழிலில் லாபம் பல வழிகளில் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூக அக்கறை அதிகரித்து காணப்படும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகள் பல வந்தாலும் வெற்றி உங்களுக்கு தான் எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் தீரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் மகிழும் படியான சில விஷயங்களை நீங்கள் கேட்க இருக்கிறீர்கள். நீண்ட நாள் முயற்சிகளுக்கு அனுகூல பலன் தரும் அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிலர் உங்கள் பொறுமையை சீண்டக்கூடிய வாய்ப்பு உண்டு எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் காலதாமதம் ஆகலாம் எனவே பொறுமையை இழந்து விடாதீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சிறு சிறு குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க புதிய பாதைகள் பிறக்கும். உத்தியோக ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் பட்டதை தவறான சமயத்தில் பேசி பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். கணவன் மனைவி ஒற்றுமை வலுவாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.

- Advertisement -