இன்றைய ராசிபலன் – 18 டிசம்பர் 2023

Rasi-palan18
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுய கௌரவம் அதிகமாக இருக்கும். யாருடைய துணையும் இல்லாமல் உங்களுடைய வேலையை நீங்களே செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனை வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிரச்சினையை பெருசாக்காதீங்க. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்காதிங்க. இன்றைய நாள் விட்டுக் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவு அதிகம் ஆகக்கூடிய நாளாக இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு கரையும். கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. கவனத்தோடு இருந்தால் பண நஷ்டம் பொருள் நஷ்டத்தை தவிர்க்க முடியும். தெரியாத மூன்றாவது நபரை நம்பி எதையும் செய்யாதீங்க. முன்பின் தெரியாத விஷயத்தில் தலையிடாதீங்க. தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். பணம் விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். கொஞ்சம் வயதானவர்களுக்கு ஏதாவது ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால், அதை சரி செய்ய நல்ல மருத்துவரை அணுகுங்கள். தேவைப்பட்டால் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மற்ற படி வேலையில் நிம்மதி இருக்கும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையையும் நம்மால் சரியாக செய்ய முடியவில்லை. முன்கூட்டியே பிளான் செய்யாததால் வந்த விளைவுகளை எதிர்கொள்வீர்கள். கவலைப்படாதீங்க, இன்றைய நாள் இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். நிதி நிலைமை சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதனால் ஏமாற்றமும் அதிகமாக இருக்கும். நாம் நினைப்பது போலவே அடுத்தவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று யோசிக்க கூடாது. ஐந்து விரல்களும் ஒரு போல இருக்கிறதா, இல்லையே. அது போல தான் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள். இன்றைய ஏமாற்றத்திலிருந்து தப்பிப்பீங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் முட்டி மோதி அதை சரி செய்து விடுவீர்கள். உங்கள் மேல் வீண் பழி சுமத்தியவர்களை ஒரு வாங்கு வாங்க போறீங்க. எதிரிகள் உங்களை கண்டு பயப்படுவார்கள். உங்களுடைய பேச்சும் திறமை, உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். மனபயம் இல்லாமல் இன்றைய நாளை ஒரு வீரனைப் போல கடந்து செல்ல போகிறீர்கள். பெண்களாக இருந்தால் வீராங்கனையாக செயல்படுவீர்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். நண்பர்களின் ஆலோசனையால் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணை உங்களுடைய கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். மனைவியிடம் பொய் சொல்லாதீங்க. பிரச்சனையை மனசு விட்டு பேசுங்க. செலவு இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். செலவை சமாளிக்க கந்துவட்டி வாங்க கூடாது. இன்று கடன் வாங்கினால் திரும்பி தர முடியாத சூழ்நிலை உருவாகும் ஜாக்கிரதை.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சின்ன கஷ்டம் இருக்கும். எந்த வேலையும் சரியாக செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். மன வருத்தத்தோடு இன்றைய நாள் முழுவதும் நகர்ந்து செல்லும். நல்ல சாப்பாடு இருக்காது. நல்ல ஓய்வு இருக்காது. கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மேலதிகாரிகளும் திட்டு வாங்குவதன் மூலம் மூட் அவுட் ஆக வாய்ப்பு உள்ளது. பெருசா மனதில் எதுவும் வச்சிக்காதிங்க. சோதனையான நேரத்தில், நல்ல மனதுக்குப் பிடித்த பாடலை கேளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். அன்றாட வேலையை கவனத்தோடு செய்தாலே போதும். எதிர் பாலின நட்பு ஆபத்தை கொடுத்து விடும். ஜாக்கிரதையாக பழகுங்கள். பேருந்தில், ஆட்டோவில் செல்பவர்கள் உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். மனது இறைவழிபாட்டில் ஈடுபடும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மனைவிக்கு பிடித்த பரிசை வாங்கி கொடுத்து குடும்ப தலைவர் மகிழ்ச்சி அடைவார்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். கையில் வந்த வருமானத்தை அனாவசியமா செலவு செய்யாதீங்க. சேமிப்பில் வைக்கவும். தெரியாதவர்களுக்கு பணத்தை கடனாக கொடுக்காதீர்கள். இனிமையான வார்த்தையை பேசி உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது. இன்றைக்கு நீங்கள் உதவி செய்தால் அது உங்களுக்கு ஆப்பு வைத்து விடும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். எதையோ சாதித்தது போல ஒரு உணர்வு இருக்கும். மகிழ்ச்சி நிறைந்த இந்த நாளில் நிறைய புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடமிருந்து வேலையில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். எல்லா பிரச்சனைகளையும் திறமையாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். இரவு நல்ல தூக்கம் இருக்கும் மனைவியிடம் நல்ல பெயர் கிடைக்கும்.

- Advertisement -