இன்றைய ராசி பலன் – 18-12-2020

rasi palan - 18-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை டென்ஷனை ஏற்படுத்தலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு போட்டியாளர்கள் இடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொறுமையை கையாள்வது நல்லது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மிகவும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டால் மன அமைதியை இழப்பீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்வதில் மும்முரமாக இருப்பீர்கள். சுய தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் தனவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்கள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொகைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் அலைச்சல்களும், வீண் விரயங்களும் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் நன்மை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கிறது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் சுபகாரிய நிகழ்வுகள் கைகூடி வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுய தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமைப்பாக இருப்பதால் இதுவரை இருந்துவந்த கவலைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சுய தொழிலில் சிறப்பான லாபம் காண வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது உத்தமம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் இன்றைய நாளில் எடுக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பணரீதியான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் உடன் இருப்பவர்களை உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய அற்புதமான நாளாக அமையும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய தேடுதல் முயற்சிகள் வெற்றியடையும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் யாரிடமும் பேசாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயத்துடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நிலுவையிலிருந்த பழைய பாக்கிகள் வசூலாவதில் கூடிய வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவீர்கள். ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.