இன்றைய ராசி பலன் – 18-07-2021

rasi palan - 18-7-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகம் உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களுக்கு எதிர்மறையாக நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய யுத்திகளை கையாள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் சில தொழில் நுணுக்கங்கள் அதிகாரிகளின் மூலம் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாக கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமையும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாக கூடிய யோகமும் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அதிக கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி காணலாம்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். புதிய நபர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை காணலாம். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை அமையும். சுயதொழிலில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை பெறலாம்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமலிருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய அறிமுகம் பெருகும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையும் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொதுக் காரியங்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் படிப்படியான முன்னேற்றத்தை காணலாம். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் மன உளைச்சலுக்கு முடிவு பிறக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் பிரச்சினைக்கு உரிய நபர்களிடம் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பகைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும், பரஸ்பர ஒற்றுமை காணப்படும்.

- Advertisement -