இன்றைய ராசிபலன் – 19 ஜனவரி 2024

Rasi-palan-new19
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க சரியான நாளாக அமையும். உங்களை திட்டியவர்கள் எல்லாம் தானாக வந்து பாராட்டுவார்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளை பற்றி பேசலாம். எதிர்பாராத பண வரவு மன மகிழ்ச்சியை கொடுக்கும். வாரா கடன் வசூல் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். மாணவர்கள் உங்களுடைய படிப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடா நட்பை தவிர்க்கவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். இறக்ககுணத்தோடு நடந்து கொள்வீர்கள். இதனாலையே சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். பாத்திரம் அறிந்த பிச்சை இடு என்று சொல்வார்கள் அல்லவா. அதுபோலத்தான் தகுதியானவர்களுக்கு தான் நாம் உதவி செய்ய வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு ஏற்படும் அவமானத்தை யாராலும் தடுக்க முடியாது. இலகிய மனம் இருந்தாலும் அதிலும் ஒரு கவனம் இருக்க வேண்டும் என்பதை, இன்றைய நாள் உங்களுக்கு உணர்த்தும் பாடம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நெருக்கடிகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலையில் பிரஷர் இருக்கும். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பித் தரவேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் கையில் பணம் இருக்காது. அடுத்தவர்களிடம் உதவி கேட்டால் கிடைக்காது. இப்படி நாலா பக்கமும் உங்களை பிரச்சனை சூழும் போது மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த டென்ஷனையும் மூளைக்கு கொண்டு போகாதீங்க நிதானமாக செயல்படுங்கள். காலையில் எழுந்தவுடன் குலதெய்வ வழிபாடு செய்வது பிரச்சனையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன் பின் தெரியாத நபரால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே உஷாராக இருக்கணும். எதிர்ப்பாலின நட்பு கூடாது. புதிய முதலீடு செய்யச் சொல்லி யாரேனும் உங்களை கட்டாயப்படுத்தினால், அதை நம்பாதீங்க. ஒன்றுக்கு இரண்டு லாபம் கிடைக்கும் என்று சொன்னாலும், உஷாராக இருக்கணும். அரசாங்கத்துக்கு புறம்பான காரியத்தில் ஈடுபடக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டை பெறுவீர்கள் என்றால் பாருங்களேன். அந்த அளவுக்கு உங்களுக்கு இன்று திருப்தி நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறு தொழில் முதல், பெரிய வியாபாரிகள் வரை இன்று சூப்பராக கல்லா கட்டுவீர்கள். மனநிறைவோடு இன்றைய நாளை நடத்திச் செல்வீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று தடுமாற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருக்கும். மேலதிகாரிகளுடன் சுமுகமான போக்கு நிலவ கொஞ்சம் நிதானமாக பேசுங்கள். உங்களை வேலையை விட்டு எப்போது தூக்கலாம் என்று சிலபேர் காத்துக் கொண்டிருப்பார்கள். எந்த கெட்ட எண்ணத்திற்கும் நீங்க இடம் கொடுக்காதீங்க. அப்படியே நைசாக காக்கா பிடித்து வேலையில் பரமன்ட்டாக இருக்க பார்க்கவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் துணிச்சலோடு நடந்து கொள்ள வேண்டும். கோழைத்தனமாக இருப்பின் உங்களை ஏரி மேய்த்து விடுவார்கள். ஏமாற்றி விடுவார்கள். குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கொஞ்சம் நீங்களும் பதிலடி கொடுத்து தான் பாருங்களேன். ஊமையாக இருந்தால் கூட இன்று பேசினால் தான் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சண்டை போடக்கூடிய நாளாக இருக்கும். நெருங்கிய நண்பர்கள் உறவுகளாக இருந்தாலும் கூட இன்று உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். எதனால் சண்டை வந்தது என்றே தெரியாது. ஆனால் சண்டை வரும். அதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது ஜாக்கிரதியாக பேசி பழகவும். சண்டை வருவது போல ஏதாவது ஆரம்பித்தால் உடனே அந்த இடத்திலிருந்து நைசாக நழுவிக் கொண்டு இடத்தை விட்டு காலி பண்ணிடுங்க. பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று அடம் பிடிக்கக் கூடாது. எல்லா விஷயத்திலும் போன போக்கில் விட்டு விட வேண்டும். முன்கோபம் அதிகமானால் இழப்பு உங்களுக்கு தான். வார்த்தைகள் கவனம் செலுத்துங்கள். இன்று பொறுமையை இழந்தால் நிறைய பொருள் சேதம் பணம் சேதம் ஏற்படும். தொழிலில் பார்ட்னரிடம் பொறுமை காக்கவும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள் தவிர அதிகாரம் செய்யாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். இன்று நீங்கள் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் பல மடங்காக உயரும். நகை சீட்டு போடுவது அல்லது வங்கியில் கணக்கு தொடங்குவது போன்ற நல்ல வேலைகளை இன்னைக்கு செய்யலாம். பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்துவீர்கள். வீட்டு பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதையோ நினைத்து ஒரு வேலையை தொடங்குவீர்கள். ஆனால் அது உங்களுக்கு பெரிய அளவில் நல்லதை செய்து விடும். பெண் குழந்தைகளால் மனது மகிழ்ச்சி அடையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதுசாக சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்க வாய்ப்புகள் உள்ளது. செலவுகள் இருக்கும் அது உங்களுக்கு சுப செலவாக நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். எதிர்பாராத பெரிய மனிதர்களின் சந்திப்பு சில நல்ல தகவல்களை கொடுக்கும். இதனால் வாழ்க்கையில் முன்னேற நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு சுறுசுறுப்பாக வாழ வழியை தேடுங்கள். நம் சம்பாதிக்கும் வழியை பாருங்க. அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டே திரியாதீர்கள். இதனால் உங்களுக்கு பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை.

- Advertisement -