இன்றைய ராசிபலன் – 19 பிப்ரவரி 2024

Rasi-palan-new19
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். அடுத்தவர்கள் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு விஷயத்தையும் வச்சுக்க மாட்டீங்க. உறவினர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். சுப காரிய பேச்சுகள் வீட்டில் தொடங்கும். கவலைகளை எல்லாம் மறந்து சந்தோசமாக இருக்க வேண்டிய நாள் இது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று நேரத்தை இன்பமாக செலவழிக்க போகிறீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது. மனசுக்கு பிடித்தவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மனது ஆன்மீகத்தை நாடும். முடிந்தால் இன்று மாலை கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது இன்னும் கொஞ்சம் மன நிறைவை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் அதிகமாக இருக்கும். அடுத்தவர்களுக்கு பாவம் பார்த்து சில உதவிகளை செய்வீர்கள். ஆனால் நீங்கள் செய்யும் உதவியின் மூலம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு கிடையாது. ஆகவே இரக்க குணத்தோடு செயல்படும் போதும், கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருங்க. பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற வார்த்தையை இன்று நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உதவி செய்தும் இரக்க குணத்தோடு, நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் ஜாக்கிரதை.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப பொறுமையான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் இருக்காது. உங்களுடைய வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை. தொழில் சுமுகமாக செல்லும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். மாமியார் மருமகள் உறவு சீர்படும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களை ஜெயிக்க விடமாட்டார்கள். வியாபாரத்தில் போட்டி போட நாலு பேர் இருப்பாங்க. இதனால் அவர்களிடம் முட்டி மோதவே இன்று நேரம் சரியாக இருக்கும். ஆகவே, உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடிங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று உஷாரா இருக்க போறீங்க. வேகத்தோட விவேகம் தான் முக்கியம் என்று புரிந்து கொண்டு சில தந்திரமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இதனால் உங்களிடம் மோத நினைக்கும் எதிரிகள் கூட விலகி விடுவார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. உறவுகளுக்குள் கவனமாக பேசவும் முன்கோபத்தை குறைக்கவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய வேலைக்கு அப்ளிகேஷன் போடலாம். புதுசாக வீடு தேடுவதாக இருந்தால் வாடகைக்கு வீடு தேடலாம். புதுசாக ஏதாவது விலை உயர்ந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் இன்று முயற்சி செய்யலாம். உங்களுக்கு அதன் மூலம் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் அவ்வளவாக வெற்றியை கொடுக்காது. நிறைய எதிர்ப்புகள் இருக்கும். நீங்கள் என்ன ஒரு வேலையை செய்ய தொடங்கினாலும் அதற்கு குறை சொல்ல நாலு பேர் இருப்பாங்க. இதனாலே உங்களுக்கு சோர்வு ஏற்பட்டு விடும். எதிர்ப்புகளை  ஜெயிக்க நீங்கள் ரொம்ப ரொம்ப போராட வேண்டி இருக்கும் பார்த்துக்கோங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் ஆனந்தமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த நல்லதெல்லாம் நடக்கும். மனது அப்படியே ரெக்க கட்டி பறக்கும். சந்தோஷத்தில் திக்குமுக்கு ஆடும் அளவுக்கு நிறைய நல்லது நடக்கப்போகிறது. ஆகவே நல்லதுக்கு பிறகு வரும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள தயாராக இருந்துக்கோங்க. அதீத சந்தோஷத்திற்கு பிறகு சின்ன கஷ்டம் வருவது இயற்கை தானே.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாளாக இருக்க போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மருந்து மாத்திரை தூக்கிப் போட்டு விடுவீர்கள். உங்களால் முடிந்தவரை ஊனமுற்றவர்களுக்கு இன்று ஏதாவது தானம் செய்யுங்கள். நன்மை நடக்கும் வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவுதான் வேலையில் பிரச்சனை இருந்தாலும் நீங்க உங்க வேலைய சந்தோஷமா பார்ப்பீங்க. யார் என்ன சொன்னாலும் தொடச்சி போட்டு இருப்பீங்க. வாழ்க்கை இவ்வளவுதான் என்று புரிந்து கொண்டு அதோடு பயணம் செய்ய மனசு ஏற்றுக் கொள்ளும். இதனால் இன்று பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது.

மீனம்


மீன ராசிக்காரர்கள் அதிகமாக யார் மேலேயும் இன்னைக்கு பாசம் வைக்காதீங்க. உங்களை யாராவது ஒருவர் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. பாசம் வைத்தாலும் பிரச்சனை தான். ஒருவர் மீது அதிக நம்பிக்கை வைத்தாலும் பிரச்சனைதான். உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கையை வையுங்க அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எந்த ஒரு விஷயத்தையும் இன்று செய்யாதீங்க.

- Advertisement -