இன்றைய ராசிபலன் – 19 மார்ச் 2023

mar 19 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சமூக அந்தஸ்து உயரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய கடன் பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குழப்பம் நீடிக்க வாய்ப்புகள் உண்டு. உற்றார், உறவினர்களால் சங்கடங்கள் வந்து செல்லும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிரடி முடிவுகள் எடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான வேலையும் கடினமான வேலையாக மாறும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் போராட்டம் முடிவுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபங்கள் எதிர்பார்த்து அளவிற்கு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுபவ அறிவை உபயோகிப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பகைவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படவும். குடும்பத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடையில்லா பணிகள் நிறையும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சல் மிகுந்த நல்ல நாளாக இருக்கிறது. எவரையும் எதிர்த்து குரல் கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்தது பூர்த்தி அடைய கூடிய அமைப்பாகும். சுபகாரிய தடைகள் விலகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் பிறக்கும். சமயோசித புத்தியுடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகை கிடைக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இடம் மாற்றம், மன மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். குடும்ப ஒற்றுமையில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுமையான சிந்தனைகள் தோன்றும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப்பெறும். கணவன் மனைவி உறவில் விரிசல் விழக்கூடும் கவனம் வேண்டும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குதூகலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உறவினர்கள் வருகை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விரும்பியதை வாங்கி மகிழுங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகளை செய்யாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு காணப்படும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

- Advertisement -