இன்றைய ராசிபலன் – 19 ஏப்ரல் 2024

Rasi-palan-new19
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புகழ் தேடி வரும். நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கான மரியாதை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுடைய திறமையை புரிந்து கொள்வார்கள். சொந்த தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். தொழிலை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல நிறைய உழைப்பை முதலீடாக கூறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகளுடன் இருந்த வாக்குவாதம் பிரச்சனை எல்லாம் விலகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் உங்களுடைய வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருங்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும். வாக்குவாதம் செய்யக்கூடாது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டமான நாளாக இருக்கும். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டீங்க. எல்லா விஷயத்துக்கும் பயப்படுவீங்க. இதனாலேயே உங்களுடைய எதிரிகள் உங்களை துரத்தி துரத்தி நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள். துரத்தும் எதிரிகளை திரும்பிப் பார்த்தாலே போதும். அவர்களுக்கு பயம் வரும். குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்காதீங்க. உஷாரா இருங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது நடக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுங்கள். வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, நாலு பேருடன் சகஜமாக பேசும் போது தான் உங்களுக்கான நல்லது நடக்கும். வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்ற வாசகம் இன்று உங்களுக்காக.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுக்கவும். கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாதவரை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். எதிர்பாராத செலவு கழுத்தை நெரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கையில் இருக்கும் சேமிப்பை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எல்லா பணமும் வீணாக செலவாக கூடிய வாய்ப்புகள் வரும். மற்றபடி தொழில் வேலை எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படும். தேவையில்லாமல் முன்கோபம் வரும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறக்கூடிய நிலைமை சில பேருக்கு வரும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொறுமையாக எதிர்கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள், பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பதவி பெருமை கிடைக்கும். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சவால்களில் ஜெயிப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். உங்களுக்கு போட்டியாக இருந்தவர்களை வீழ்த்தி வெற்றிவாகை சூடுவீர்கள். ஆனால், இதனால் புதிய எதிரிகள் உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தேடி வரும். நீங்கள் அலட்சியமாக ஒரு வேலையை செய்தால் கூட அதில் உங்களுக்கு சக்ஸஸ் தான். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாமியார் மருமகள் உறவில் இருந்த விரிசல் சரியாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகளும் போராட்டங்களும் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீங்கள் சாதாரணமாக ஏதாவது வேலையை தொட்டாலுமே அதை குறை சொல்ல நாலு பேர் இருப்பார்கள். உங்களை ஊக்குவிக்காமல், உங்களை தாழ்த்தி பேசும் நபர்களோடு சாவகாசம் வச்சுக்காதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனநிறைவோடு வீட்டிற்கு தேவையான சில வேலைகளை செய்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். நஷ்டமாக கூடிய அளவுக்கு சென்ற தொழில் கூட திரும்பவும் நல்ல நிலைமைக்கு வரும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் போராடின விஷயங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். உங்களை விடாமல் துரத்திய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். அலட்சியத்துடன் எந்த ஒரு வேலையிலும் கால் வைக்க கூடாது.

- Advertisement -