இன்றைய ராசிபலன் – 19 ஜூன் 2023

jun 19 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய அனுபவங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் அடங்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடன் இருந்து கொண்டே சிலர் சூழ்ச்சிகளை புரிவார்கள். சிந்தையில் இருக்கக்கூடிய தேவையில்லாத குப்பைகளை வெளியில் தூக்கி போடுங்கள். எதிர்பார்த்த பணம் கையில் சேரும். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. முக்கிய முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கைகூடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. பெரிய மனிதர்களுடைய சந்திப்பு மனதிற்கு தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்கிற நிலை மாறும். கடவுள் பக்தி அதிகரித்து காணப்படும். புதிய ஒப்பந்தங்களில் நினைத்த காரியங்கள் நடக்கும். கூட்டுத் தொழில் சாதக பலன் தரும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உஷாராக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எவருடைய பொய்யான பேச்சிற்கும் மயங்காதீர்கள். உங்களுடைய வேலை மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். பொருளாதாரம் உயர கீழ் பணி புரியும் பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயலாற்றக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தாம் தூம் என்று செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை போடுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு ஊடல்கள் நீங்கும். உடல் நலம் முன்னேற்றம் காணும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளுக்கு மீறிய சில விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். கையில் அதிகம் பணம் புழங்கும் எனினும் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிக்கனத்தின் உன்னதத்தை கற்றுக் கொள்வீர்கள். அவசர தேவைகளுக்கு அல்லாடுவீர்கள். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தகாத நண்பர்களின் சேர்க்கையை புறக்கணியுங்கள். ஆரோக்கியத்தை பேணுங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமுடன் இருப்பது நல்லது. சுற்றி இருப்பவர்களுடைய சூழ்ச்சிகளை இனம் கண்டு கொள்வீர்கள். பெற்றோர்களுடைய விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயங்களில் மற்றவர்களை தலையிட விடாதீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும் வகையில் அமையும். குறுக்கு வழியை சொல்லும் நண்பர்களை புறக்கணியுங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லுங்கள். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். காலம் சில விஷயங்களை உங்களுக்கு கால தாமதமாக உணர்த்தி இருக்கிறது என்று நினைப்பீர்கள். உடல் நலம் தேறி வரும்.

- Advertisement -