இன்றைய ராசிபலன் (19 அக்டோபர் 2021)

rasi palan 19/10/2021
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நினைத்த காரியங்களை எளிதில் முடித்துவிட முடியாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் போட்டியாளர்களை எதிர்க்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்களுடைய திறமை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் கூடுமானவரை சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ப அவர்களுக்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் டென்ஷன் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் மேலும் வலுவாகாமல் இருக்க கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்கக் கூடிய மனப்பக்குவம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றி பாதையை நோக்கி பயணிக்க செய்யும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய நட்பு வட்டம் மேலும் விரிவடைய சந்தர்ப்பங்கள் உருவாகும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளை கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் மீண்டும் எடுத்து செயல்படுத்தக் கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்தி இன்பத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனரீதியான செலவுகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் அவற்றை கண்டு கொள்ளாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது வெற்றியை தேடித்தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய புதிய சிந்தனை வெற்றி வாய்ப்பை ஈட்டுத்தரும். உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை குடும்பத்தில் இருப்பவர்களை குழம்ப செய்யாமல் இருப்பது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விருந்தினர் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் எதையும் கையாள்வதில் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களை பெற இருக்கிறீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருந்து வருபவர்களுக்கு அவசர முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும். அங்காள பரமேஸ்வரி தாயை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அமைதியாக இருக்கவேண்டிய நாளாக அமைய இருக்கிறது. நண்பர்களுடை ஆசை கிடைப்பதில் தொந்தரவு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற முன் கோபத்தை தவிர்த்து ஒருவரை ஒருவர் குடும்பத்தில் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடிய வகையில் சிந்தனை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடியும் அற்புத நாள். தாய்வழி உறவினர்கள் முதல் சுபகாரிய பேச்சு வார்த்தை நடைபெறலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்று இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கருத்துக்களை பதிவு செய்வதையும் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் குறித்த வருங்கால திட்டமிடல் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒருமுறைக்கு பல முறை ஆலோசனை செய்து விட்டு பின்னர் செயல்படுத்துவது நல்லது. துறை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எளிதாக கவரும் யுக்திகள் புரியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் கூடுமானவரை தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமையை படைக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய ரீதியாக தீராத பிரச்சனைகள் கூட எளிதாக தீர்ந்துவிடும் யோகம் உண்டு. தகுந்த நபரை அணுகுவது உத்தமம். சிவ வழிபாடு மேற்கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -