இன்றைய ராசிபலன் – 20 ஜனவரி 2024

Rasi-palan-new20
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நல்லதுக்கே சில விஷயங்களை சொன்னாலும், அது அடுத்தவர்களுக்கு கெட்டதாக தோன்றும். புதிய எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. நல்லதை மனதில் நினையுங்கள். அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இன்று விபரீதம் விளையும். ஜாக்கிரதை, மற்றபடி ஆரோக்கியம் மேம்படும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிரடியான நாளாக இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் வெடி வெடிக்கும். அந்த அளவுக்கு இன்று நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கடைசி நிமிஷம் வரை பரபரப்போடு ஒரு வேலையை செய்து முடித்து வெற்றிவாகை சூடுவீர்கள். கடைசி நிமிஷத்துல பஸ் மிஸ் பண்ணி இருந்தேன் இன்னைக்கு என் கதை முடிஞ்சுது. அப்படின்னு சொல்லுவாங்க இல்ல, அந்த மாதிரி அனுபவங்கள் இன்று உங்களுக்கு ஏற்படும். எல்லா விஷயத்தையும் முன்கூட்டியே பிளான் பண்ணிக்கோங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி ரொம்ப ரொம்ப முக்கியம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிடிக்காதவங்க கிட்ட பேசாம இருங்க. தேவையற்ற பஞ்சாயத்துகளில் தலையிடாதீங்க. அலுவலகத்தில் உங்கள் வேலையை மட்டும் பாருங்க. பக்கத்து டேபிளை திரும்பி கூட பாக்காதீங்க. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் இன்று நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். நீங்கள் நினைத்தபடி பிரமோஷனை தட்டி செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு மட்டும் தான். தைரியமாக பேசுங்கள். பயத்தை ஒதுக்கி வையுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று கஷ்டமான வேலையை கூட சுலபமாக முடிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். பாராட்டுகள் கிடைக்கும் நாள். இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. சக மனிதர்கள் மத்தியில் உங்களுக்கு மட்டும் கிரீடம் சூட்டப்படும். நீங்கள் மட்டும் தனித்துவமாக தெரிவீர்கள். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் வருமானமும் இரட்டிப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைக்கவும். இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலைகள் இழுப்பறியாக நடக்கும். சோம்பலும் உடல் சோர்வும் உங்களை எந்த வேலையும் செய்ய விடாமல் தடுக்கும். இந்த நாள் சோம்பேறித்தனத்திற்கே உரிய நாளாக இருப்பதால் நல்லது குறைவாகவே நடக்கும். கெட்டது தேவைக்கு அதிகமாக நடக்கக்கூட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கோழைத்தனமாக நடந்து கொள்வீர்கள். எல்லா விஷயத்திலும் மனதில் ஏதோ ஒரு பயம் இருக்கும். இது நமக்கு சரியாக வருமா என்ற சந்தேகத்திலேயே நிறைய வாய்ப்புகளை நல்ல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். குழப்பங்களை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். கோழைத்தனமாக இருந்தால் இன்று நீங்கள் சாதிக்க முடியாது. அடுத்தவர்களுக்காக பயந்தால் உங்கள் வாழ்க்கையை வாழ முடியாது. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் அழகை பார்த்து அடுத்தவர்கள் பொறாமைப்படுவார்கள். நீங்கள் சாதாரண காட்டன் புடவை கட்டினால் கூட அது அடுத்தவர்களின் கண்ணை உறுத்தும். அந்த புடவை லேசாக கிழியும் அல்லது ஏதாவது கறை படிந்து விடும். திஷ்டி கழிக்கும் வகையில் சின்ன பிரச்சனை வரும் பயப்படாதீங்க. உங்களுக்கு நடந்த நல்லதை நாலு பேருக்கு தெரியும்படி வெளிப்படையாக சொல்லாதீங்க. குடும்ப உறவுகளுக்குள் மட்டும் மகிழ்ச்சியை பகிரவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுயமரியாதை கௌரவ பிரச்சனை இருக்கும். சொந்த பந்தங்களுக்கு இடையே போட்டி பொறாமை சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது. நீ பெரியவ, நான் பெரியவனா என்ற பிரச்சினையில் குடும்பத்தின் ஒற்றுமை நிலைகளையும். அதனால் ஈகோ பார்க்காதீங்க. மரியாதை என்பது நாம் கேட்டு வாங்குவது அல்ல. தானாக வருவது. ஆகவே இன்று எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று சாதனையாளர்களாக மாறுவீர்கள். உங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக சீக்கிரம் செய்து முடிப்பீர்கள். வெற்றி கொடியை சூடக்கூடிய நாள் இது. கோர்ட்டு கேஸ் வழக்குகள் எல்லாம் உங்கள் பக்கம் சாதகமாக அமையும். கை நிறைய பணம் வரும். சுப காரிய செலவு ஏற்படும். சொத்து வாங்கக் கூடிய யோகம் உங்களுக்கு இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம். நல்லது நடக்கும். தொழிலில் கணக்கு வழக்கு பார்க்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். அலட்சியம் சில இழப்புகளை உண்டாக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். இதனால் மனம் சோர்வடையும். வெளியில் இருக்கும் பிரச்சனையை வீட்டிற்குள் கொண்டு வராதீங்க. வீடு வேறு, அலுவலகம் வேறு, என்பதை நன்றாக புரிய வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் குடும்பத்தில் இருக்கும் நிம்மதியும் கெட்டுப் போகும். இன்று மனது அமைதி நிலையை பெறாது. ஆகவே புதிய சிந்தனையை கைவிடவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பொய் சொல்லாதீர்கள். அடுத்தவர்களை ஏமாற்றி வாழ வேண்டும் என்ற சிந்தனை ஒரு துளி கூட உங்களுக்கு வரக்கூடாது. குறுக்கு வழியில் சிந்திக்கக்கூடாது. அரசாங்கத்துக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடக்கூடாது. வண்டியில் போகும்போது ஹெல்மெட் அவசியம் தேவை. காதில் ஹெட்போன் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டாதீங்க.

- Advertisement -