இன்றைய ராசிபலன் – 20 பிப்ரவரி 2024

Rasi-palan-new20
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். தெளிவு பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் வெற்றிக்கான எல்லா தகுதியும் உங்களை வந்து சேரும். வாழ்க்கையில் உயர்ந்த மனிதர்களாக மாறுவதற்கு உண்டான முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். யாராவது உங்களை திட்டி விட்டால் அதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். மனசு சங்கடத்தோடு இருக்கும். இதனால் வேலையில் ஈடுபாடு இருக்காது. சின்ன சின்ன தவறுகளும் வேலையில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே மனதை தெளிவு படுத்திக் கொள்ள காலையில் எழுந்தவுடன் இஷ்ட தெய்வம் நாமத்தை சொல்லி ஐந்து நிமிடங்கள் தியானம் செய்யவும். அனாவசியமாக அடுத்தவர்கள் பேசுவதை பற்றி கவலை பட கூடிய வேலையை இன்னைக்கு விட்டுடுங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அனுபவ பாடங்கள் நிறைய கிடைக்கப் போகின்றது. நிறைய எதிரிகள், நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால் அது எல்லாம் உங்களுக்கு நல்லதை செய்யக்கூடிய விஷயங்களாக மாறும். ஆகவே பிரச்சனைகளை கண்டு இன்று துவண்டு போகக்கூடாது. எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழ வேண்டும். கோழைத்தனத்தை இன்று ஒதுக்கி வைத்து விடுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் அவசரமாக எந்த வேலையையும் இன்னைக்கு செய்யாதீங்க. கொஞ்சம் பொறுமையை கடைபிடிக்கவும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். டென்ஷனோடு செய்யக்கூடிய வேலையில் தவறுதான் வரும். ரிலாக்ஸ் ஆகி பதட்டமில்லாமல் வேலை செய்தால் நிச்சயம் அதில் நல்ல பெயர் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. மனதிலேயே அழுத்தி வைத்திருந்த கோபதாபங்களை வெளிப்படுத்துவீர்கள். இதனால் குடும்பத்தில், வேலையில், தொழிலில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. இடம் பொருள் ஏவல் அரிந்து சில விஷயங்களை பேசுவது நல்லது. வெறும் கோபத்தை மட்டும் வைத்து எதையும் சாதிக்க முடியாது பார்த்துக்கோங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீங்க. மனசு காற்றில் அப்படியே மிதக்கும். காதல் கைகூடும். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து கூடுதல் நேரத்தை செலவழித்தால் பிரச்சனைகளை சரி செய்யலாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பெரிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நல்லதையும் செய்து கொடுக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடங்கிப் போவதால் எந்த அவமானமும் இல்லை என்பதை நம்புங்கள். நான் தான் பெரியவன் என்ற கர்வத்தை தூக்கிப் போட்டால் உங்களுடைய வாழ்க்கையில் என்று நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சக ராசி காரர்களுக்கு இன்று வாழ்க்கை போன போக்கில் போயிரணும். அடம்பிடித்து வாழ்க்கையை மாற்றனும் என்று நினைத்தால் கஷ்டப்படுவீங்க. உணர்ச்சிவச படாதீங்க. பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். செலவை குறைக்கவும். சேமிப்பை உயர்த்தவும். வேலை செய்யும் இடத்தில் முன்கோபத்தை காட்டவே கூடாது. மேலதிகாரிகளிடம் கோபமாக பேசக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. வேகத்தை விட உங்களுக்கு இன்று விவேகம் தான் ரொம்ப ரொம்ப முக்கியமாக தேவை. ஆகவே புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். அவசரமா வேலையை தப்பு தப்பா செஞ்சு திட்டுவாங்காதீங்க. கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் என்று கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று எல்லோரிடமும் கருத்து வேறுபாடு வரும். எல்லார்கிட்டயும் சண்டை போடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வாக்குவாதம் செய்து கொண்டே இருக்க போறீங்க. ஆனால் இதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. நேரம் வீணாவது தான் மிச்சமாகும். ஆகவே உருப்படியான வேலைகளை பார்க்க அமைதியாக இருக்கவும். யாராவது வந்து சண்டை போட்டா, போட்டி போட்டு பதில் பேசி அவங்களுக்கு நியாயத்தை புரிய வைக்க முயற்சி செய்யாதீங்க. அமைதியா இருங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். செலவை குறைப்பதே உங்கள் பிரச்சனைக்கு ஒரு வழி. இருந்தாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வைத்து விடாமல் சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அந்த முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமையை சீர் செய்ய உங்களுடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். மனைவி சொல்வதை செவி கொடுத்து கேளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வேலையில் பிரஷர் இருந்தாலும் மனதில் சின்ன அமைதி இருக்கும். வேலையை முடித்து விடலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும். அந்த நம்பிக்கையை இன்று உங்களுடைய வாழ்க்கையை சுலபமாக மாற்றும். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். அதை நீங்கள் இன்று புரிந்து கொள்வீர்கள். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு இருங்க. ஆனா எல்லாரையும் முழுசா நம்பிராதிங்க.

- Advertisement -