இன்றைய ராசிபலன் – 20 மார்ச் 2023

mar 20 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. காலை முதலே சுபச் செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் குடைச்சல் அதிகரிக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள். எதிலும் பரந்த மனப்பான்மையுடன் இருப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டுத் தொழில் புரியக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக முடியும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாம் மனிதர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுயநலமாக செயல்படாமல் பொதுநலமாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.

- Advertisement -

சிம்மம்
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகம் சிரிப்புடன் காணப்படும். தேவையில்லாத மன கசப்புகளை மனதிலிருந்து அகற்றுங்கள். குடும்ப ஒற்றுமையை பேணுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தது பூர்த்தியடையும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் இருந்து பின் வாங்க வேண்டாம். எவரையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொலைதூர நட்பு வட்டம் விரிவடையும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாதீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் பணி சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை பெறுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிரிவினை மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் பலிதம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டிய முன்னேற்றம் பெறுவீர்கள். எண்ணியது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விடா முயற்சி விஸ்வரூப வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்ப விஷயங்களில் மற்றவர்களை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும் கவனம் வேண்டும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சில விஷயங்களில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும் பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும்.

- Advertisement -