இன்றைய ராசிபலன் – 20 மார்ச் 2024

Rasi-palan-new20
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு நாளை எதிர்பார்த்த அளவு தேவைகள் பூர்த்தியாகாது. நன்மைகள் குறைவாக நடக்கும். சின்ன சின்ன தோல்விகள் நிறைய பாடங்களை கற்றுத் தரும். வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்று தன்னம்பிக்கையோடு அடுத்த வேலையை பார்ப்பவர்கள் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையை இழந்தவர்கள் கஷ்டப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இன்றைய நாள் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் பாட்னரோடு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதனால் புதிய முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். லாபமும் அதிகரிக்கும். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று பெரிய அளவில் லாபம் பார்ப்பீர்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். மனநிறைவோடு இருப்பீர்கள். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இருந்தாலும் எல்லா விஷயங்களையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். முன்கோபத்தை வெளிக்காட்ட மாட்டீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று ரிலாக்ஸாக நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் செலவுகளும் உண்டாகும். பார்த்துக்கோங்க.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எந்த வேலையையும் முழுசாக முடிக்க முடியாது. ஆகவே ப்ளான் பண்ணாமல் எந்த வேலையிலும் இறங்காதீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் சோம்பேறித்தனம் படாமல் இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக எல்லா வேலையும் முடிக்க வேண்டும். உங்களுடைய குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். மன உறுதியோடு செயல்படுவீர்கள். நினைத்ததை முடித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து, சில காரியங்களை சாதிப்பீர்கள். உங்களுடைய பிள்ளைகளை சமாளிப்பதில் சில சிரமங்கள் உண்டாகும். எதிரிகள் தொல்லை விளக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு பொருளை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவு சந்தோஷத்தை கொடுக்கும். வீட்டிலிருந்த சிக்கலை சரி செய்து, நீண்ட நாள் தலைமேல் சுமந்து கொண்டிருந்த பாரத்தை இன்று இறக்கி வைப்பீர்கள். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. அடுத்த நாளைக்கு தேவையான வேலையை கூட இன்றே முடித்து வைத்து விடுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் மோதலை உண்டு பண்ணிவிடும். நிம்மதியை குறைக்கும். ஆகவே பொறுமையாக இருப்பது நல்லது. ஈகோ பார்க்காதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. முன்கோபடக்கூடாது. அனாவசியமாக அடுத்தவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டக்கூடாது. கஷ்டப்பட்டு வாங்கி வைத்திருந்த நல்ல பெயர் கெடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக இருங்கள். குறிப்பாக உங்களை விட பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது. சொந்த பந்தங்களாகவே இருந்தாலும் பிரச்சனை என்று வந்தால் ஒதுங்கி நிற்பது தான் நல்லது. அடுத்தவர்களுக்கு பஞ்சாயத்து செய்ய போகாதிங்க. மூன்றாவது நபருக்காக கருத்து சொல்லி பேசுவதை கூட தவிர்த்துக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் அடுத்தவர்களை பற்றி கமெண்ட் செய்யக்கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதுசாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றைய நாளில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். செய்த தவறுகளை உணர்ந்து, வருத்தப்படக்கூடிய நாள் இது. சண்டை போட்டவர்களிடம் நீங்களே போய் மன்னிப்பை கேட்பீர்கள். நல்லது நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் உண்டாகும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்காதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அதிர்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. அவசரப்பட்டு முடிவை எடுத்து விட்டோமோ என்று மனக்குழப்பத்தில் இருப்பீர்கள். கவலைப்படாதீங்க, எடுத்த முடிவை எடுத்துட்டீங்க. இப்போ பின்வாங்கவும் முடியாது. பிரச்சனையிலிருந்து வெளியேறவும் முடியாத சூழ்நிலையில் சிக்கி இருப்பீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களை குழப்பத்திலிருந்து வெளி வர செய்யும்.

- Advertisement -