இன்றைய ராசிபலன் – 20 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். எடுக்கின்ற காரிய முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தேவைக்கு அதிகமான பண வரவு இருக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பமான நிலை இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். சிலருக்கு தேவையற்ற பயணங்களால் உடற் சோர்வு உண்டாகும். எதிர்பார்த்த பண வருகைகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். தொழில், வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிலருக்கு எதிர்பாரா பொருள் வரவு ஏற்படும். திருமண வயது பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் நிம்மதி உண்டாகும். சிலர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். சொத்து தொடர்பான விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும். பொருள் வரவில் சிறிது தாமதம் இருக்கும். உறவினர்களால் தர்ம சங்கடமான நிலை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் மனதில் படபடப்பான நிலை இருக்கும். சிலருக்கு பெண்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். பிறருடனான விவாதங்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு விடயங்களில் அக்கறை கொள்ள வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் அதிகளவு லாபம் கிடைக்கும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். சிலர் திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரியவர்களின் ஆதரவு இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகளில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூலமான கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களே எதிரி ஆக வாய்ப்பு உண்டு.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்ததெல்லாம் நிறைவேறும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்கள் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சுபகாரிய செலவுகள் ஏற்படும். உடல், மனம் உற்சாகமாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் பழைய கடன்களை வட்டியுடன் அடைத்து முடிப்பார்கள்.

- Advertisement -