இன்றைய ராசிபலன் – 20 ஜூன் 2023

jun 20 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சொத்து பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். நினைத்த ஒப்பந்தங்களில் நினைத்த பலன்களை பெறுவீர்கள். மேல் அதிகாரிகளுடன் பகைத்துக் கொள்ளாமல் இணக்கமாக செல்வது உத்தமம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் தைரியமாக இருக்க இருப்பது நல்லது. சமீபத்தில் அறிமுகமானவர்களால் உற்சாகமடைவீர்கள். தொழிலில் நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய வாய்ப்புகள் தானாக தேடி வருவதற்கு வாய்ப்பு உண்டு. நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். சகோதரத்துவத்தால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை கேட்கலாம். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பாதையில் பயணிக்க கூடிய நல்ல அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள். வெளி வட்டாரத்தில் கிடைக்கக்கூடிய நட்புகளை புறக்கணிக்காதீர்கள். எதிலும் சமயோசிதமாக சிந்திப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுப காரியம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் எதிர்பார்த்த செய்திகளை கேட்கலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கை தரக் கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே எதிலும் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். போர்க்குணம் மிகுந்து காணப்படும். அனாவசியமாக மற்றவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மனதில் கொள்ளாமல் அக்கறையோடு இருப்பது நல்லது. எதிலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்காதீர்கள். திடீர் பயணங்களால் செலவுகள் வரக்கூடும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டி முன்னேறக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கடினமான உழைப்பால் லாபம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மோதல்கள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் பண தேவை ஏற்படலாம். நண்பர்களின் உதவிக்கரம் தகுந்த சமயத்தில் கிடைக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் உழைத்த உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். துணிச்சலுடன் எவரையும் எதிர்கொள்ளுங்கள். எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். புறம் பேசுபவர்களை புறக்கணியுங்கள் மனம் தெளிவாக இருக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் ஆசைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய உழைப்பை மற்றவர்களுக்காக செலவிட நேரிடும். தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வரக்கூடும். வாடிக்கையாளர் எண்ணிக்கை ஏற்றம் காணும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாளாக இருக்கிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்யாதீர்கள். உயர்ந்த சிந்தனையுடன் சிந்திப்பது நல்லது. வீண் பொழுதுபோக்குகளை புறக்கணித்து நேர விரயத்தை குறைப்பது நல்லது. ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாதீர்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய எண்ணங்கள் ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். தொலைதூரப் பயணங்களின் பொழுது ஜாக்கிரதை உடன் இருப்பது நல்லது. எதிர்பாராத நபர்களின் அறிமுகம் புது அனுபவங்களை பெற்று தரும். வீண் வாக்குவாதம் வேண்டாம்.

- Advertisement -