இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2022

today rasi palan 20/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் அதிகரித்து காணப்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய சக்தி வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக எதையும் நீங்கள் எதிர்கொள்வீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகம் தேவை. நமக்கு என்ன வந்தது என்று இல்லாமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது அமைதி காப்பது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்த்து விடுங்கள். சுய தொழிலில் ஏற்றும் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு பல இடங்களில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழுபறியாக இருந்த வேலைகள் சுலபமாக முடிவடையக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாடுகளின் மீது அதிக ஆர்வம் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மந்தமாக இருந்த சூழ்நிலை சுறுசுறுப்பாக மாறும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. தேவையற்ற முன்கோபத்தால் இழப்புகளை சந்திக்க நேரலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் வந்து சேரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்கான யோகம் உண்டு. பணம் பல வழிகளில் இருந்து தேவைகளை பூர்த்தி செய்யும். உத்தியோகஸ்தர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் உணர்ந்து செயல்படுவது நல்லது. கைக்கு மீறினால் இருப்பதும் கிடைக்காமல் போய்விடும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான சரியான நேரமாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில தர்ம சங்கடங்கள் உருவாக கூடும். சுப காரியத்தில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய தன்னம்பிக்கை துளிர் விடக்கூடிய இனிய நாளாகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சில விமர்சனங்களை சந்திக்க நேரிடும். புதுமைகளை புகுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேற கூடிய இனிய நாளாகும் என்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்ப்புகளை பல இடங்களில் இருந்து பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்கள் சில சூழ்ச்சிகளை புரிவார்கள். சுய தொழிலில் ஏற்றம் காணும் யோகம் உண்டு. வியாபார விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வழி காரியத்தில் ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இதுவரை இருந்து வந்த மன உளைச்சலில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அவசர தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் சில மோதல்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு எனவே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய தொழில் துவங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் நடைபெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. சுவாச ரீதியான பிரச்சினைகளை ஆரோக்கியத்தில் சந்திக்கலாம் கவனம் தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடல் உழைப்பு அதிகரித்து காணப்படும். குடும்பத்தினருடன் இருந்து வந்த சில மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகத்திற்கு குறைவில்லாமல் காணப்படுவீர்கள்.

- Advertisement -