இன்றைய ராசி பலன் – 20-3-2020

rasi palan - 20-3-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். நிறுத்தி வைத்திருந்த முக்கிய காரியங்களை செய்ய தொடங்குவீர்கள். விஐபிகளின் ஆதரவும், அவர்களால் நன்மையும் உண்டு. உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவர். அந்நிய நபர்களின் அறிமுகமும் அவர்களின் நட்பும் கிடைக்கும். நண்பர்கள் எப்போதும் போல எல்லா விஷயத்திலும் துணை நிற்பார்கள். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக பணம் நிறைய செலவாகும். மனபாரம் குறையும். பொருளாதார பிரச்சனைகள் விலகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். செய்ய வேண்டிய காரியங்களில் ஒரு சில தடைகள் வந்தாலும் அதை துணிச்சலுடன் தகர்த்தெறிய முடியும். நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைத்து பொறுப்புகளை ஒப்படைக்கவும். எப்போதும் சந்தோஷமாக இருக்க விருப்பம் ஏற்படும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகள் அணைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியம் கைகூடி வரும். கணவன் மனைவிடைய அன்பு பாசம் அதிகமாகும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நல்ல நபர்களின் தொடர்பால் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவும் வரலாம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. தூரத்து பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெறும். உத்யோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாக்கு சாதுரியத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். மனதில் சந்தோஷமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணவரவு கூடும். விரும்பியதை அடைய புது வழி ஒன்று கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவர். உடன்பிறப்புகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள். நண்பர்கள் வகையில் சந்தோஷம் ஏற்படும். வெளிடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பழைய கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், புது கடன் வாங்குவதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் நலத்தில் ஒரு சில தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். மனக்குழப்பம் வேண்டாம். மனம் பாதித்தால் உடல் நலமும் சேர்ந்து பாதிக்கும். ஆன்மீக தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான வளர்ச்சி பாதையில் செல்லும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உங்கள் செல்வாக்கை உயர்த்தும் முயற்சியில் வெற்றி கொள்ள முடியும். குடும்ப பெருமை உயரும். எப்போதும் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் நலனில் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவும். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். பாதியில் விட்டுப்போன வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பணபுழக்கம் நன்றாக உள்ளபடியால் பொருள் சேர்க்கை உண்டாகும். வாகன பராமரிப்பு செலவு கூடும். எதிர்பார்க்காத சில அதிர்ஷ்டம் வரும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவர். குடும்பத்திற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் வேலை பளு குறைய ஆரம்பிக்கும். கூட்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிற்பகுதியில் சிறப்பான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். முக்கிய காரியங்களில் இருந்த தேக்க நிலை அடியோடு மாறும். உடன் பிறப்பால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். கடன் பிரச்சனை ஒருபுறம் இருக்க அதை அடைப்பதற்கு உண்டான வழியும் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவியிடையே எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய லாபம் காண முடியும். பிரபல நபர்களின் அறிமுகமும், அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் தன லாபம் உயரும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பணவரவு வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான சம்பவம் ஒன்று நடக்கும். வீடு வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லவும். உடன்பிறப்புகளுக்கு எப்போதும் உதவியாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறு உடல் உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். பூர்வீக சொத்து மூலம் பணம் கைக்கு வரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படவும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட நண்பரகளாக மாறி உதவி செய்வர். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பேச்சிலும், செயலிலும் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். மனதில் புது தெம்பும், உற்சாகமும் ஏற்படும். புதிய வீடு, வாங்கும் வாங்கும் முயற்சிகள் கைகூடும். உடன்பிறப்பு மூலம் பண உதவி கிடைக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம். சிறியளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூரத்து சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அடிக்கடி வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பெரியளவில் மாற்றமும், முன்னேற்றமும் வரும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் புதிய முயற்சிகளில் ஆதாயமான பலன் கிடைக்கும். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையாக இருக்கவும். உங்கள் அருமை பெருமையை புரிந்து கொண்டு பலரும் உங்களை நாடி வருவர். அடுத்தவர்களுக்காக உதவி செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடியிருக்கும் வீட்டை புதுப்பிக்கவோ அல்லது வீடு மாற்றி செல்லவோ வேண்டி இருக்கும். பணம் எப்போதும் கையில் புரளும். குடும்ப பாரம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை அதிகம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டாகும். தொழில், வியபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்கள் பெயரை நிலைநிறுத்தி கொள்ள அதிகம் போராட வேண்டியிருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவி சில நேரத்தில் பிரச்சனையில் முடியும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதிக்க வேண்டாம். நண்பர்களால் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருந்த உங்களுக்கு திருப்புமுனை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உங்கள் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விரயங்களும், வீண் விரயங்களும் உண்டு. குடும்ப சுமைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். மனதில் உள்ள குழப்ப நிலை நீங்கி தெளிவு உண்டாகும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை நீங்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம். குடும்ப பிரச்சனைகளுக்கு ஓர் முற்று புள்ளி வைக்க முடியும். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் மனசங்கடங்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியம் சீர் பெரும். பெற்றோர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். உடன் பிறந்தோரின் ஆதரவை எதிர்பார்க்கலாம். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் புது உற்சாகம் ஏற்படும். மனைவி வழி சொந்தங்களினால் அனுகூலமான பலனை கிடைக்க பெறுவீர்கள். பழைய கடன் பிரச்சனை தீர புது வழி ஒன்று கிடைக்கும். குடும்பத்துடன் பல புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செயல் திறமை வெளிப்படும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். வீண் கோபத்தையும், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதையும் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெற முடியும்.குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நல்ல நல்ல புரிதல் இருக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் யாரையும் நம்ப வேண்டாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். எப்போதும் மன அமைதியை விரும்புவீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் மனமறிந்து செயல்பட்டு அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு சாதமாக செயல்படுவதால் மகிழ்ச்சி பொங்கும். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். மனதில் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் ஏற்படும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். அரசாங்க வழியில் சில ஆதாயம் கிடைக்கும். பெற்றோர்கள் வகையில் சில அனுகூலமான பலன் உண்டு. வெளியூர் இருந்து நல்ல செய்தி வரும். சந்தேகத்திற்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும். வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். உற்றார், உறவினர் உங்கள் உயர்வை கண்டு வியப்பர். வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாக தொடங்கும். புதிய முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.