இன்றைய ராசிபலன் – 21 பிப்ரவரி 2023

feb 21 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே சகோதரர்களின் வழியில் நன்மைகள் நடக்கும். பெரியவர்களை அனுசரியுங்கள். சுய தொழிலில் மறைமுகமாக இருந்து வந்த போட்டிகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வெளியிடங்களில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிசார் பிரச்சனைகள் குறையும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதற்கு நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இதுவரை இல்லாத புரிதல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணிகளில் உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் வழியில் புதிய பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதுரியத்துடன் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்கள் திறமைகளை வீணடிக்காதீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்தியுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பேச்சுக்கு மயங்காதீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த ஆசைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே எதிர்பார்ப்புகளை குறைப்பது உத்தமம். சுய தொழிலில் லாபம் காண புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான தேவையற்ற செலவுகள் வந்து சேரும் கவனம் வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நாளாக அமைய போகிறது. சுய தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. துறை சார் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் வாதங்கள் தவிர்ப்பது நல்லது. வருமானம் உயரம் வாய்ப்பு உண்டு.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் போட்டிகளை தவிர்ப்பது உத்தமம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சல் இருக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் பயனற்ற விவாதங்களை புரியாதீர்கள். வாடிக்கையாளர்களை கவர்வதில் ஆர்வம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்த மன உறுத்தல் மறையும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வெறுப்புகளை உமிழ வேண்டாம். மனம் விட்டு பேசுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தன வரவு ஏற்படும். லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கற்பனை திறன் வளரும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுக்கு எதிரான விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புகழ் அதிகரிக்கும்.

- Advertisement -