இன்றைய ராசிபலன் – 21 பிப்ரவரி 2024

Rasi-palan-new21
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. எதிரிகளை கண்டு பயப்பட மாட்டிங்க. வெட்டு ஒன்று துண்டு இரண்டு, என்று பேசி பிரச்சனைகளை முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வேலை செய்யும் இடத்தில் திறமை வெளிப்படும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தோடு இருங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கப்போகின்றது. சில பேருக்கு எதிரிகளின் மூலம் சின்ன சின்ன தொந்தரவு வரும். உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு கும்பல் உங்களை பற்றி தப்பு தப்பா சில விஷயங்களை பரப்பி விடும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மீது தவறு இல்லை என்றால் எதை பார்த்து நீங்க பயப்படாதீங்க. ரொம்ப நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களை முழுசா நம்பி உங்கள் மனதில் இருக்கும் அத்தனை ரகசியத்தையும் வெளிப்படையாக கூற வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரக்கூடாது. எல்லா விஷயத்தையும் பொறுமையாக கையாள வேண்டும். பிரச்சனை வந்தால் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று பாருங்கள். அய்யய்யோ பிரச்சனை வந்துவிட்டதே நினைத்து சோர்ந்து போய் உட்காரக் கூடாது. வாழ்க்கை துணை சொல்லுவதை கேளுங்கள். பிரச்சனைகளை வாழ்க்கை துணையிடம் பகிர்ந்து கொள்வது நன்மையை தரும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க. வெளியிடங்களில் சாப்பிடாதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக கவனியுங்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவுகள் நண்பர்கள் இடத்தில் இருந்து நல்ல செய்தி தொலைபேசி மூலம் வர வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத விஷயத்தில் தலையிடாதீங்க. நீங்க உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்றைய நாள் சுமூகமாக செல்லும். தேவையில்லாமல் அடுத்தவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைத்தால் எல்லா பிரச்சனையும் உங்கள் தலைமையில் விழும். ஜாக்கிரதை, யார் எப்படி போனா என்ன, என் நிம்மதி தான் முக்கியம் என்று இருப்பதே நல்லது. இன்னைக்கு அப்படித்தான் இருக்கணும் வேற வழி இல்ல.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும்‌. சொன்ன வேலையை, சொன்ன நேரத்தில் செய்ய முடியாது. வாக்கு கொடுத்துவிட்டு தவிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். இதனால் கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தலைகுனிவு உண்டாகலாம் பாத்துக்கோங்க. நிதி நிலைமையை சமாளிக்க முடியாமல் சில பேர் திக்குமுக்கு ஆடுவீர்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று காலை கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக தொடங்கினாலும், போக போக உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெற வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் நடந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தோடு இன்று மாலை வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனது எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. யாராவது உங்களை மூட் அவுட் பண்ண தப்பு தப்பா பேசிகிட்டே இருப்பாங்க. அடுத்தவர்களை குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இதனால் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. மனதை தெளிவாக வச்சுக்கோங்க. அடுத்தவர்கள் சொல்வதை முழுமையாக அப்படியே மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. உங்களுடைய சுய சிந்தனை சுய புத்திசாலித்தனம் என்று ரொம்ப ரொம்ப முக்கியம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக இருக்கப் போகின்றது. எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டேன் என்று சவால் விட்டு செயல்படுவீர்கள். இதனால் நல்லது நடக்கும். இதனால் செய்யும் வேலையில், செய்யும் தொழிலில் உயர்ந்து அடுத்த நிலைக்குப் போகக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய தான தர்ம காரியங்களில் சில பேர் ஈடுபடுவார்கள். இதனால் மன நிம்மதியும் அடைவீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருந்த நாளாக இருக்கப் போகின்றது. எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உங்கள் மனதில் பிறக்கும். இதனால் நிறைய வெற்றிகள் வகையை சூடுவீர்கள். பாராட்டும் புகழும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கோர்ட் கேஸ் வழக்குகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். பொன் பொருள் நகை வாகன சேர்க்கை உண்டு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கப் போகின்றது‌ எந்த வேலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திக்கு முக்காட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மனைவி ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் குழந்தை ஒரு பக்கம் என்று ஆளாளுக்கு ஒரு பிரச்சனையை கொண்டு வருவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் பொறுமையாக கையாளுங்கள் முன்கோபம் வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் கோபத்தை குறைக்க வேண்டும். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு இன்று பிரச்சனை செய்யக்கூடாது. மேலதிகாரிகளிடம் தன்மையாக பேசுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கு மட்டும் பேசுங்கள். வாழ்க்கை துணையை அனுசரித்துச் சென்றால் நல்லது நடக்கும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். அடுத்தவர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். நேரத்துக்கு சாப்பிடுங்க.

- Advertisement -