இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினர் இன்று பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பிறருடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கோர்ட் விவகாரங்களில் இழுபறி நிலை நீடிக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். சுப காரியம் முயற்சிகளில் தடை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். இறை கடாட்சம் பெருகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் இருக்கும். உடல் மற்றும் மனநிலை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் வெற்றிகரமாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். ள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் சோம்பல் தனம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தொய்வு ஏற்படும். சிறிய அளவிலான மருத்துவ செலவுகள் உண்டாகும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய தினம் நண்பர்களால் லாபம் உண்டாகும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். நீண்ட நாள் இழுபறி காரியங்கள் நல்லபடியாக முடியும். பழைய கடன் பாக்கிகள் வந்து சேரும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் தடை உண்டாகும். பணியிடத்தில் பிறருடன் பிரச்சனைகள் ஏற்படலாம். கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தொழில், வியாபாரங்களில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களிடையே மதிப்பு கூடும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். போட்டிகளில் தங்கள் திறமையால் வெற்றி காண்பீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும். சிலர் புதிய வீடு, வாகனங்களை வாங்குவார்கள்.

கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு மருத்துவ ரீதியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். தாய் வழி உறவுகளின் ஆதரவு இருக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பெண்களால் சில சங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு மனதில் இனம் புரியாத கவலை இருக்கும். கொடுக்கல் – வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள்.

- Advertisement -