இன்றைய ராசிபலன் – 21 ஜூன் 2023

jun 21 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கும். மற்றவர்களால் அவமானப்பட நேரலாம். சுற்றி இருப்பவர்களை எதிர்த்து முன்னேறுவீர்கள். கவலைகளை மறக்க குறுக்கு வழியை நாடாதீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் வேண்டும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிம்மதியான நல்ல நாளாக இருக்கப் போகிறது. மனக்குறை நீங்க இறை வழிபாட்டில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் போராடித்தான் வசூலிக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களை எதிர்த்து எதையும் செய்து விடாதீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் செலவுகள் வரக்கூடும் கவனம் வேண்டும். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் நடக்காதா என்று நினைத்த ஒரு விஷயம் நடக்கும். தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள் உழைப்பால் உயர்வீர்கள். போராடும் குணத்தை வலுப்படுத்துங்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பொறுப்புகளை ஏற்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் நீங்கள் கண்ட கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாகும். புதிய நபர்களை சந்திப்பீர்கள் அதனால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தகாத நண்பர்களின் சேர்க்கையை விட்டு விலகுவது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உடன் இருப்பவர்கள் உங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். உங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறும். பண ரீதியான விஷயத்தில் முக்கிய முடிவுகளை கவனமுடன் எடுப்பது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் பெற்றோர்களை மதித்து நடப்பது நல்லது. வரவைக் காட்டிலும் செலவுதான் அதிகரிக்கும் எனவே சிக்கனம் தேவை. நெருக்கமானவர்களிடமிருந்து சில நல்ல விஷயங்களை கேட்கக்கூடும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தலைமை ஏற்று சில குறிப்புகளை சுமப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். வீண் பகையை வளர்க்க வேண்டாம். வெளியிட பயணங்களில் கவனம் வேண்டும். கடினமான காரியத்தையும் எளிதாக செய்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் கவனிக்கவும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சகோதரர்களுடன் இருந்து வந்த சிறு சிறு சண்டைகள் தீரும். திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு பிரச்சனைகளையும் சிரித்த முகபாவத்துடன் சமாளிக்க கூடிய மனப்பக்குவத்தை பெறுவீர்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பகைவர்களும் உங்களின் நண்பர்களாக வாய்ப்புகள் உண்டு. முயற்சி வெற்றி தரும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் கவன சிதறல் ஏற்படலாம் எச்சரிக்கை தேவை. தேவையற்ற நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். முக்கிய ஆவணங்களை கையாளும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத சில விஷயங்களை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் மறையும். உற்ற நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். வீண் பொய்களை அடுக்காதீர்கள் மாட்டிக் கொள்வீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை கால தாமதப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் பெற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள். எதிர்பாராத செலவுகள் வரலாம். சிலர் மறதியால் பிரச்சனைகளை சந்திக்க கூடும் கவனம் வேண்டும்.

- Advertisement -