இன்றைய ராசிபலன் – 21 ஜூலை 2022

today rasi palan 21/07/2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அனுகூலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வரும். சுய தொழிலில் ஏற்றம் காணலாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடைபெறும் இனிய நாளாக இருக்கிறது. பேச்சு வார்த்தைகளை இருந்து வந்த தடைகள் விலகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு குழப்பங்கள் நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு முடிவையும் காலதாமதப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் சறுக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் நினைத்ததை சாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் உயரும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபிட்சம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். சுப காரியம் முயற்சிகளில் வெற்றியை காணக்கூடிய அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுய முடிவு எடுப்பது நல்லது. அடுத்தவர்களை நம்பினால் ஆபத்து நிச்சயம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் இருந்து வந்த நன்மதிப்பு உயரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் எதை செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்து முடித்து விடுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமையிலிருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே இருந்து வந்த ஊடல்கள் நீங்கும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பணம் பல வழிகளில் இருந்து வந்து சேரும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை பேசி பெரிதாகாமல் அமைதி காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவலைகளை மறக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியுடைய புரிதல் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்திகளை பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் உழைப்பை கொடுப்பது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்கள் நீங்கள் எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய பொறுப்புகள் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் இருக்க போகிறது. பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுப பேச்சு வார்த்தைகள் நடைபெறும். நீங்கள் நீண்ட நாள் கண்ட கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு கடமையில் கண்ணியம் தேவை.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் பழிகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் சிறு சிறு மன கசப்புகளை மறந்து அமைதி காப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்தது நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாண்டிய வெற்றி கிடைக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் இருக்கும் எண்ண அலைகளை நேர்மறையாக மாற்றுவது நல்லது. உங்களை விட்டு சென்றவர்கள் உங்களை தேடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சுபகாரிய தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழிகள் மறையும்.

- Advertisement -