இன்றைய ராசி பலன் – 21-05-2021

rasi palan - 21-5-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் ஈட்டக்கூடிய அமைப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் மௌனம் காப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். சுப காரியங்கள் கை கூடும். சக்கரத்தாழ்வாரை துதியுங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களின் போது கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் செய்வதில் இடையூறுகள் ஏற்படும். தளராத முயற்சி செய்தால் வெற்றி காணலாம். சுப்பிரமணியரை வழிபட நன்மைகள் நடக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சுக்ர வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்து வந்த சந்தேகங்களுக்கான பதில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு பழைய நண்பர்கள் உடைய அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நவகிரக வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியே நற்செய்தி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். அம்பாள் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒருமுறை ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சிவ பார்வதியை வழிபடுங்கள் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும். தொலை தூர இடங்களிலிருந்து வரும் செய்திகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பெருமாள் வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலூட்டும் வகையில் அமையும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை ஈடுபடுவதில் கவனம் தேவை. வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் மகிழ்ச்சி பிறக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் வேலையில் மட்டும் கவனம் தேவை. அடுத்தவர்களுடைய பேச்சில் மூக்கை நுழைத்தால் பிரச்சனை உங்களுக்கு தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் அனுசரணையான பேச்சு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். எதிலும் ஜெயம் பெற ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுங்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் எச்சரிக்கை தேவை. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத மன இறுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு அவசியம். சங்கடங்கள் தீர விநாயகரை வழிபடுதல் நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மன கசப்புகள் மறையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். குடும்ப அமைதிக்கு மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் அமையும். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக சில செயல்களை செய்வார்கள். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பைரவரை வழிபட நல்லது நடக்கும்.