இன்றைய ராசிபலன் – 22 ஜனவரி 2024

Rasi-palan-new22
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். எல்லாம் நல்லவர்கள் என்று நினைப்பதில் தவறு கிடையாது. ஆனால் எல்லோரும் நமக்கு நல்லது மட்டுமே தான் நினைப்பார்கள் என்று நினைப்பது தவறு. சுயநலத்திற்காக செயல்படும் மனிதர்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து நடந்துக்கணும். இல்லையென்றால் யாரிடமாவது ஏமாற்றப்படுவீர்கள். அந்த ஏமாற்றம் உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடும் பாத்துக்கோங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கான வேலை கொஞ்சம் இழுபறியாக இருக்கும். இன்றைய நாளை நீங்கள் சீக்கிரம் தொடங்க வேண்டும். பஸ் 8 மணிக்கு வரும் என்றால், 7.30 மணிக்கு நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் இருக்கணும். அப்போதுதான் பிரச்சனைகள் இருக்காது. கடைசி நேரத்தில் அவதி அவதியாக எந்த வேலையும் செய்யாதீங்க. இன்று பதட்டமான காரியம் உங்களுக்கு சக்சஸ் ஆகாது எல்லா விஷயத்திலும் நிதானம் இருக்கணும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகள் இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீங்க. பிரமோஷனுக்காக முயற்சி செய்யலாம். நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வதன் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்


கடக ராசிகாரர்கள் இன்று எதையாவது சாதித்து காட்ட வேண்டும் என்று போராடுவீர்கள். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஒதுக்கி வைப்பீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள். முயற்சியை செய்து பலனை எதிர்பார்க்காதே என்று சொல்லுவார்கள். அதே போல இன்று உங்களுடைய முயற்சிகளை முதலீடாக செய்யுங்கள். நிச்சயம் எதிர்பார்க்காத ஒரு பலன் இன்று கிடைக்கவில்லை என்றாலும் கூடிய சீக்கிரம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். நண்பர்களை சந்திப்பீர்கள். இதனால் பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அலுவலகப் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும். கேலி பேச்சை குறைத்துக் கொள்ளவும். அனாவசியமாக மூன்றாவது நபரை பற்றி பேசாதீங்க. அது உங்களுக்கு இன்று பிரச்சனையை கொடுத்து விடும். குறிப்பாக பெண்கள் அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களிடம் உஷாராக பழகணும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் உங்களை தொல்லை கொடுத்து வந்த எதிரிகளை சமாளிக்க சுலபமான வழியை கண்டுபிடித்து சந்தோஷப்படுவீர்கள். எதிரி உங்களை கண்டு பயந்து அஞ்சும் அளவுக்கு சில அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சண்டைக் காட்சி படம் பார்த்தது போல ஒரு திருப்தி இருக்கும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தவும். முதலீடு செய்யும்போது கவனம் இருக்கட்டும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் வரும். உங்கள் பணக்கஷ்டத்தை தீர்த்து வைக்கும் மன நிறைவான நாள் இது. இன்று மாலை ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். மனசுக்கு பிடித்த கோயிலுக்கு செல்வீர்கள். எதிர்பாராத நல்லது உங்கள் வீடு தேடி வரும். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று விருப்பு வெறுப்பு எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு, உங்களுடைய கடமைகளை செய்து முடித்து விட வேண்டும். பிடித்தாலும் சில விஷயத்தை செய்யணும். பிடிக்கவில்லை என்றாலும் சில விஷயங்களை செய்துதான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது. இன்று மனசாட்சியை கழட்டி வைத்து விடுங்கள். மனநிறைவற்ற சூழ்நிலை இன்று உண்டாகும் வாங்கிய. காசுக்கு செய்ய வேண்டியதை செய்வீங்க அவ்வளவுதான்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் மருத்துவரை அணுகுவது சிறப்பான பலனை தரும். நீங்களே மருந்து மாத்திரைகளை மெடிக்கல் ஷாப்பில் வாங்கி போடக்கூடாது. மற்றபடி சொந்த தொழில் வேலை எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். கவனக்குறைவு காரணமாக சின்ன சின்ன தவறுகளை செய்து திட்டு வாங்குவீங்க. வேலை செய்யும் இடத்தில் பணியின் போது அலட்சியம் இருக்கக் கூடாது. தொழிலில் கூடுதல் கவனம் இருக்கட்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை முன் நின்று சரியாக செய்து முடிக்கணும். அடுத்தவர்களின் நம்பி ஒப்படைக்க கூடாது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே அதை எல்லாம் தவிர்த்து விடுங்கள். உங்களுடைய பொருட்களை கொஞ்சம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடல் அசதி காரணமாக சுறுசுறுப்பாக இன்றைய நாள் செயல்பட முடியாது. தலைவலி டென்ஷன் வர வாய்ப்பு உள்ளது. இன்று கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலையே நிலவும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலைகளை பொறுப்போடு செய்வீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியை தரக்கூடியதாகவும் அமையும். மனசாட்சிக்கு புறம்பாக சில விஷயங்களை நீங்க செய்ய மாட்டீங்க வேண்டாம். இன்று வேண்டாம் என்று சொல்லுவதன் மூலம், சில பேருடைய எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும். கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

- Advertisement -